சென்னையில் கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபல ரவுடியை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக NIA விசாரிக்க ஆணை பிறப்பிக்கவுள்ளார் ஆளுநர். சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் பிரதான நுழைவு வாயிலான எண்.1-ல் போலீசார் பணியில் இருந்த போது, கருக்கா வினோத் என்பவர் எதிரில் உள்ள நடைபாதையில் இருந்து 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் (பெட்ரோல் குண்டு) தீப்பற்ற வைத்து வீசினார்.
முதல் பாட்டில் நுழைவு வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த தடுப்பு (பேரி கார்டு) அருகே வந்து விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் நல்வாய்ப்பாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு எந்த வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. மேலும் அப்பகுதியில் வாகனம் ஏதும் வராத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்ப்படவில்லை.உடனே அங்கு இருந்து தப்பிய அந்த நபரை போலீசார் பிடிக்க முயன்றனர் அப்போது போலீசார் மீதும் அந்த நபர் பெட்ரோல் குண்டு எரிய முயன்றுள்ளார். பிறகு போலீசார் அவரை பிடித்து கிண்டி காவல் நிலையத்தில் விசாரித்ததில் அவர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்(42) என்பது தெரியவந்தது.
கருக்கா வினோத் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடியாக (சி - பிரிவு) உள்ளது. இவர் மீது ஏற்கெனவே 4 கொலை முயற்சி வழக்கு உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக 2015-ம் ஆண்டு மாம்பலத்தில் உள்ள ‘டாஸ்மாக்’ கடையிலும், 2017-ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து கேட்டபொழுது போலீஸார் விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுப்பதால் வீசியதாகத் தெரிவித்தார்.
ஏற்கெனவே பா.ஜ.க தலைமை அலுவலகமான தி.நகர் கமலாலயத்தில் வெடிகுண்டை வினோத் வீசியது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ச்சியாக இதுபோல் அரசியல் தலைவர்கள் முதல் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டு வந்துள்ளார்.இப்படிப்பட்ட நபர் இரண்டு தினங்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். வந்த உடனே ஆளுநர் மாளிகைக்கு பெட்ரோல் குண்டு வீசியது விஷயம் கிடையாது. குடியரசு தலைவர் இன்று சென்னை வரும் நேரத்தில் ஆளுநர் மாளிகையில் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாட்டின் முதல் குடிமகள் வரும்போது பாதுகாப்பு சூழல் இருப்பதால், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்தியாவின் மதிப்பு குறையும் அளவிற்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு சாதாரண மாநிலமாக இல்லை, அதாவது பிரதமர் ராஜீவ் காந்தி கொலை அது போன்று பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்த இடமாக இருந்து வருகிறது. தற்போது மீண்டும் தமிழகம் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பது இந்தியா மீதே பலி சுமத்துவது போல் உள்ளது. இதற்கிடையில் இவ்வளவு பெரிய சம்பவத்தை செய்த் கருக்கா வினோத் தண்டனையில் இருக்கும்போது இவரை ஜாமினில் வெளியில் கொண்டு வந்தது யாரு? இவர் மூலமா தொடர்ச்சியாக அசம்பாவிதம் நடைபெற்று வருகிறது. இதனால் ஆளுநர் RN ரவி உள்துறை அமைச்சகம் விசாரிக்க NIA-விடம் விசாரிக்க ஆணை பிறப்பிக்க உள்ளதாக தெரிகிறது. எனவே இந்த NIA விசாரணையில் கருக்கா வினோத் மட்டுமின்றி யாருடைய தூண்டுதலின் பேரில் இத்தகைய செயலில் ஈடுபட்டார் அவரும் சிக்குவார் என்று தெரிகிறது.