24 special

RCB கனவை தகர்த்திய RR.. கண்ணீருடன் வெளியேறிய பெங்களூரு வீரர்கள்..!

CSK , RCB
CSK , RCB

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. இருக்கட்டத்தை எட்டிய ஐபிஎல் போட்டி பைனலில் கொல்கத்தா அணியுடன் யார் மொத போகிறார் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி ராஜஸ்தான் அணியுடன் மோதி தோல்வியை பெற்றது பெண்களுரூ அணி.


நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் கடைசி கட்டத்தில் பிளே ஆஃப் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடம் பிடித்தது. குவாலிபைர் மற்றும் எலிமினிடர்  போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. முதல் அணியாக பைனலுக்கு குவாலிபையேர் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நேரடியாக பைனலுக்கு சென்றது. அடுத்ததாக நேற்று ராஜஸ்தான் அணியுடன் பெங்களூரு அணி எலிமினேட்டர் சுற்றில் விளையாடியது. இதில், டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்தது ராஜஸ்தான் அணி. அதன்படி விராட் கோலி மற்றும் ஃபாப் டூபிளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஃபாப் ரன்களை பெரியதாக குவிக்க முடியாமல் அவுட் ஆனார், கோலியும் பெரியதாக ரன்களை குவிக்கமுடியாமல் 29 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்ததாக வந்த பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் 11 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. அஹமதாபாத் பெரிய மைதானம் என்பதால் ஒவ்வொரு வீரர்களும் பவுண்டரி லைனை தொட கஷ்டப்பட்டனர். இந்தநிலையில், ராஜஸ்தான் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோஹ்லர் காட்மோர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி ரன்கள் சேர்த்தனர். காட்மோர் 20 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் 45 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பை உணர்ந்து ஆடாமல் இறங்கி அடிக்க முயற்சித்து ஸ்டெம்பிங்கில் ஆட்டமிழந்தார். 

இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், 2ஆவது தகுதிச் சுற்று போட்டிக்கும் முன்னேறியது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த அர்சிபி எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்வியோடு பெங்களுரு அணியிடம் ஒரு ட்ரோபி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி அணி தோற்றது உடன் சிஎஸ்க்கே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். அதாவது, கடைசியாக இந்த சீசனில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி பிளே அப்புக்கு தகுதி பெற்றது. அந்த வெற்றி மூலம் பெங்களூரு வீரர்கள் பைனலில் வெற்றி பெற்றது போல் கொண்டாடியது. மேலும், விராட் கோலியின் கொண்டாட்டம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

அப்போது, சிஎஸ்க்கே முன்னாள் வீரரான அம்பதி ராயுடு பெங்களூரு அணியுடன் சிஎஸ்கேவின் கோப்பையை கொடுத்து விடுங்கள், தெருவெல்லாம் சிற்றி வரட்டும் என இணயத்தளத்தில் பதிவிட்டிருந்தார். நேற்று எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை தழுவியதும் சிஎஸ்க்கே ரசிகர்கள் இனைய பக்கத்தில் மீம்ஸ்களை போட்டு பங்கமாக பெங்களூரு அணி மற்றும் ரசிகர்களை பங்கம் செய்து வருகின்றனர். ஒரு பக்கம் அம்பதி ராயுடு சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பைகள் கைப்பற்றப்படுவதில்லை. கோப்பையை வெல்ல பிளேஆஃப்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என பதிவிட்டு அட்வைஷ் கொடுத்துள்ளார். 

சென்னை அணியுடன் வெற்றி பெற்ற கோலி கொண்டாடிய நிலையில், மைதானத்தை சுற்றி வந்தனர். ஆனால், நேற்று கண்ணை கசக்கி கொண்டு பெவிலியன் திரும்பினார் விராட். அணைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்த சீசனில் ஆர்சிபி கோப்பையை கைப்பற்ற வேன்டும் என்று எதிர்பார்த்த நிலையில், விரட்டின் செயலே அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ராஜஸ்தான் வெற்றியை அந்த அணியின் ரசிகர்களை விட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் பெரும் அளவில் தோல்வியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.