Tamilnadu

கருட சேவையில் தண்டு சரிந்து கீழே விழுந்த பெருமாள் சிலை.....17 வருடங்களுக்குப் பிறகு இப்படியா நடக்கணும்!!

God
God

தமிழ் மாதங்களிலேயே மிக சிறப்பான மற்றும் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் மாதமான வைகாசியில் வைகாசி பிரம்மேற்சவம் என்பது மிகவும் விமர்சியாக நடைபெறும் ஒன்று. அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் வைகாசி பிரம்மேற்சவம் என்பது தொடர்ச்சியாக எட்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த இருபதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் தினந்தோறும் காலை மாலை என இருவேளைகளிலும் பல்வேறு வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி மக்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதன்படி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் மூன்றாம் நாளான இன்று பிரம்மேற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் இன்று நடைபெற்றுள்ளது.


இதற்காக அதிகாலை 4 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் நீல நிற பட்டுடுத்தி கோவிலின் அலங்காரம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கு அடுத்ததாக நாளை 23ஆம் தேதி அன்று நாக வாகனத்தில் ஸ்ரீ பரமநாத திருக்கோளத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வரதராஜ பெருமாள் மாலையில் சந்திர பிரபை வாகனத்தில் திருவீதி உலா தரிசனத்திற்கு வருகிறார். இதனைத் தொடர்ந்து மே 24ஆம் தேதி என்று தங்க பல்லாக்கு உற்சவமும் மாலை வேளையில் யாழி வாகனத்தில் திருவீதி உலாவும், மே 25ஆம் தேதி அன்று ஸ்ரீ வேணுகோபாலர் திருக்கோளத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி மாலை யானை வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

மேலும் மே 26 ஆம் தேதி அன்று தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியே திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது மே 27ஆம் தேதி அன்று குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது இறுதியாக மே 28ஆம் தேதி அன்று மட்டை அடி உற்சவம் நடைபெற்று தீர்த்தவாரிய உற்சவமும் நடைபெறுகிறது. இப்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மேற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது போன்று சென்னை திருவெற்றியூரில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலிலும் வைகாசி பிரம்மேற்சவம் பிரம்மாண்டமாக நடைபெறும் ஆனால் இக்கோவிலின் ராஜகோபுர பணிகள் நடைபெற்று வந்த காரணமாக கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் எந்த திருவிழாக்களும் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகமும் நடந்ததை தொடர்ந்து உற்சவங்கள் திருவிழாக்கள் போன்றவை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வைகாசி பிரமமேற்சவமும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சியாக இத்திருவிழா நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அதுமட்டுமின்றி காஞ்சிபுரத்திற்கு அடுத்து வெகு விமர்சியாக வைகாசி பிரம்மேற்சவம் திருவெற்றியூர் நடைபெறுவதால் திருவெற்றியூரில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோவிலை சின்ன காஞ்சிபுரம் என்றும் அழைப்பார்கள்.

இந்த நிலையில் பிரம்மேற்சவத்தின் முக்கிய நிகழ்வான மூன்றாம் நாளான இன்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது அப்பொழுது பள்ளத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்கள் தூக்கி சுமந்து வரும் பொழுது பள்ளக்கின் தண்டு உடைந்து பெருமாள் சிலை முற்றிலும் சரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதுமட்டுமின்றி இந்த பரபரப்பில் பட்டாச்சாரியர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ராஜகோபுரம் பணிகள் நடைபெற்று வந்ததால் கிட்டத்தட்ட 17 வருடங்கள் எந்த விழாவும் உற்சவமும் நடைபெறாமல் இருந்து வந்த வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மேற்சவமும் கருட சேவை உற்சவமும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் பொழுது இப்படி தண்டு உடைந்து பெருமாள் சிலை கீழே விழுந்திருப்பது அப்பகுதியின் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இது பெரும் அபசகுனமாக இருக்கலாம் என்றும் பக்தர்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.