24 special

வெளியான ராகுல் காந்தி வீடியோ..! சிக்கிய தொகுப்பாளர்..!

Rahul gandhi, ranjan
Rahul gandhi, ranjan

புதுதில்லி : கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் வயநாட்டில் அமைந்துள்ள ராகுல்காந்தி எம்பியின் அலுவலகம் சிபிஐஎம் மாணவர் அமைப்பால் சூறையாடப்பட்டது. இதைத்தொடர்ந்து கேரளாவில் அனைத்து கட்சி அலுவலகங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காங்கிரசார் மாநிலத்தில் கம்யூனிஸ்டுக்கள் குண்டர்களை வைத்து ஆட்சிநடத்துவதாக கடுமையான குற்றசாட்டை முன்வைத்திருந்தது.


இந்நிலையில் வகுப்புவாதிகளால் கன்ஹையா லால் எனும் தையல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இதனிடையே ராகுல் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தாக்குதல் நடத்தியவர்கள் குழந்தைகள் என கூறியிருந்தார். அதை பிஜேபியினர் உட்பட பலர் பகிர்ந்திருந்தனர். ஆனால் அது கன்ஹையா கொலை சம்பவத்துடன் தொடர்புபடுத்தி வெளியிடப்பட்டதாக காங்கிரசார் பிஜேபியினரை விமர்சித்திருந்தனர்.

இதனிடையே ஜீ டிவி தொகுப்பாளர் ஒரு நேரலையில் ராகுல் பேசிய வீடியோவை வெளியிட்டு கன்ஹையா சம்பவத்தை குறிப்பிட்டிருந்தார். இதனால் கொந்தளித்த காங்கிரஸ் தனது ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களில் தொகுப்பாளர் மீது வழக்கு பதிந்தது. அதை தொடர்ந்து தொகுப்பாளர் ரஞ்சனை கைதுசெய்ய சத்தீஸ்கர் போலீசார் விரைந்தனர்.

உத்திரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ரஞ்சனின் வீட்டிற்கு சத்தீஸ்கர் போலீசார் சென்றனர். அதற்குள் அங்கு மாநில போலீசார் விரைந்தனர். இருமாநில காவல்துறைக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து நொய்டா போலீசார் ரஞ்சனை கைதுசெய்து அன்று இரவே ஜாமீனில் விடுவித்தது.ரஞ்சன் மற்றும் ஜீ நெட்ஒர்க் இதுதொடர்பாக ஏற்கனவே பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரோஹித் ரஞ்சன் உச்சநீதிமன்றத்தை அணுகினார். தன்மீதுள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைக்க கோரியதுடன் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி  மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரை கைதுசெய்ய இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.