கொல்கொத்தா : கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான லீலா மணிமேகலை என்பவர் ஒரு ஆவணப்பட தயாரிப்பாளர். இவர் தனது பட விளம்பரத்திற்க்காக ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவினரின் தெய்வத்தை கொச்சைப்படுத்தியும் அந்த தெய்வம் பிரிவினைவாத கொடியை கையிலேந்தி புகைபிடிப்பதுபோலவும் போஸ்டர் வெளியிட்டிருந்தார்.
இந்த சம்பவம் உலகெங்கும் பெரும் சர்ச்சையானது. மேலும் இந்திய வெளியுறவுத்துறை கனடாவை சேர்ந்த உயரதிகாரிகளிடம் தனது கண்டனத்தை தெரிவித்து ஆவணப்பட பட்டியலில் இருந்து அதை நீக்குமாறும் வலியுறுத்தியிருந்தது. மேலும் கொல்கொத்தா உட்பட பல இடங்களில் லீலா மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் அந்த போஸ்டரை ஆதரிக்கும் விதமாக ஒரு புகழ்பெற்ற கோவில் நிர்வாகம் சமூகவலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்குவங்க மாநிலம் கொல்கொத்தாவில் அமைத்துள்ளது தக்ஷிணேஸ்வர் ஆலயம். இதன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து "காளிமாதாவுக்கு மது கொடுக்கப்பட்டு ஆடுகள் பலியிடப்படுகின்றன. நாங்கள் அனைவரும் மா காளியை வணங்குபவர்கள். இதை ஏற்றுக்கொண்டாலும் சிகரெட் பிடிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதுகுறித்து அந்த கோவிலின் அறங்காவலராக குஷால் சௌத்ரி கூறுகையில் " கோவில் நிர்வாகத்திற்கென எந்தவொரு சமூக வலைதள கணக்கும் இல்லை. யாரோ விஷமிகள் திருக்கோவிலின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.