எதிர்க்கிறோம் அதனால் இருக்கிறோம் என்று வீர வசனம் பேசிவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார் பத்திரிகையாளர் ஏகைலைவன் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-அதனால் இருக்கின்றேன். எதிர்க்கின்றேன்அதனால் இருக்கின்றேன் என்ற முழக்கத்தை வைத்திருக்கும் புரட்சியாளர் வன்னி அரசுக்கு...
என்னை சீமானின் செய்தி தொடர்பாளர் என்கிறாய், சில்லரைகளின் பின்னால் ஒதுங்கி, தூண்டி சிலாகிதம் அடைகிறாய். நல்லது, அது உமது ஆத்தம திருப்தி. கீழே இப்பது தலைவர் Dr.திருமாவளவன் MP அவர்களின் வரைந்த ஓவியம். திருவண்ணாமலையில்..முதல்வர் ஸ்டாலின் வருகிறார் என்பதற்காக, Dr.திருமா அவர்களின் படத்தை மூடிமறைத்து, அங்கே ஸ்டாலின், உதயநிதி படத்தையும், அவரின் அப்பா கலைஞரின் படத்தையும் வைத்துள்ளார்கள். உங்களுக்கு அவமானம் ஏதும் இருக்காது. திமுக-வை விமர்சித்தால் மட்டுமே ரத்தம் சூடேறும்.? போகட்டும்.
தோழர் திருமா அவர்களின் படத்தை மறைத்தது எந்த வகை சமூக நீதி என்று எதிர்க்க வேண்டாம், கேட்கவாவது கூடாதா என்ன? ஒடுக்கப்பட்ட மக்களின் (திராவிடர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்) ஏகோபித்த தலைவராக இருக்கும் திருமாவின் படம் அங்கே இருந்தால் என்ன குத்தம். தொட்டால் தீட்டு, என்பதைப் போல் ‘பார்த்தால் தீட்டாகிவிடுமா?
அந்த இடத்தில் ஒரு மோடியின் படம், வேண்டாம் பாஜக தலைவர் அண்ணாமலையின் படம், அதுகூட வேண்டாம், ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் படம், எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் படம், மருத்தவர் ராமதாஸின் படம் என ஏதோ ஒன்று இருந்திருந்தால் இப்படி செய்துவிட முடியுமா? துணிவார்களா?இதையெல்லாம் பேச-கேட்க உங்களுக்கு நேரமிருக்காது தோழர்.இருக்கட்டும்,
நம்ப சமூகநீதி கண்காணிப்பு குழு தலைவர் மானமிகு ஐயா சுபவீ அவர்களே…நீங்களாவது ‘இது சமூகநீதியா?’ என்று கொஞ்சம் கண்காணித்து சொல்லுங்களேன். தோழர் திருமா அவர்களின் படம் இருந்த இடத்தில் ஒரு பெரியார் படம் இருந்தால்,.. மானமிகு ஐயா வீரமணியின் படம் இருந்தால், இப்படித்தான் மறைத்திருப்பார்களா?
நான் மேற்சொன்ன தலைவர்களின் படத்தை எல்லாம் அழிக்க-மறைக்க துணிவில்லாத போது, தோழர் திருமா அவர்களின் படத்தை மட்டும் மறைப்பது என்ன திராவிட மாடல்? மனுதர்மவாதிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என நீங்களாவது கண்டித்திருக்க வேண்டாமா? பார்வைக் கோளாறு என்பதைப் போல், உங்களுக்கு சிந்தனைக் கோளாறு, சித்தாந்த கோளாறு இருந்துவிடக் கூடாது என்றே வேண்டுகிறேன் ஐயா.
அப்புறம் வன்னி.நீங்க, டிவிட்டரில் முழக்கமாக வைத்துள்ள ‘எதிர்க்கின்றேன். அதனால் இருக்கின்றேன்’ என்ற வாசகத்தை மாற்றி, ‘குனிகின்றேன். அதனால் இருக்கின்றேன்’ என பதிவிட்டுக் கொள்ளுங்கள். பொருத்தமாக இருக்கும் எனவும் விமர்சனம் செய்துள்ளார் ஏகைலைவன்.
தொடர்ந்து திமுகவிடம் அடிமாட்டு விலைக்கு போய் விட்டதாக விசிகவினர் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.