தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதனம் குறித்து தவறான கருத்துக்களை கூறியதோடு சனாதனத்தை எதிர்க்க கூடாது முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் இந்த முடிவில் நான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் அவர் சந்தித்த விமர்சனங்களும் கண்டனங்களும் ஏராளம்! சனாதனம் என்பது இந்து மக்களால் பின்பற்றப்படும் ஒரு நம்பிக்கை அதை எப்படி இவர் தவறாக கூற முடியும் ஒரு அமைச்சர் நாட்டில் உள்ள ஒரு பகுதி மக்கள் பின்பற்றும் சமயத்தை குறித்து அவதூறாக பேசியது மட்டுமின்றி அதனை ஒழித்தே ஆகுவேன் என்று கங்கணம் கட்டி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
மேலும் இந்த சர்ச்சை விமர்சனங்களோடு நிற்காமல் ஒரு அமைச்சர் இந்து சமயத்தை குறித்து தவறாக பேசி மக்களின் மனதை புண்படுத்தி உள்ளார் என அமைச்சர் உதயநிதி மீது பல மாநிலங்களில் வழக்குகள் பதியப்பட்டது. அதுமட்டுமின்றி திமுக 2024 ஆம் ஆண்டு தேர்தலில் முக்கிய நகர்வாக நினைத்துக் கொண்டிருக்கும் I.N.D.I.A கூட்டணியில் இருந்தும் உதயநிதிக்கு எதிராக விமர்சனங்களும் அவர் தெரிவித்த கருத்து தவறானது ஆனால் நாங்கள் அதற்கு உடன்பாட போவதில்லை என்றும் தெரிவித்தது இதனால் திமுகவால் அந்த கூட்டணியில் தொடர முடியாத நிலையில் தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த விவகாரம் பெறும் பூதாகரமாக வெடித்ததால் இனி சனாதனம் குறித்து பெருமளவில் வாய் திறக்க வேண்டாம் என்று நினைத்து உதயநிதி தற்போது ஒதுங்கி இருப்பதும் அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதிக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரு விவகாரத்தில் சிக்கி உள்ளார். அதாவது காங்கிரஸ் கட்சியின் கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று சிலவற்றை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர் அதில் மிக முக்கியமாக நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறது. இதனை இந்த கூட்டம் முடிந்த பிறகு ராகுல் காந்தியே இந்த தகவலை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் ஒரு இடத்தில் பேசும்போது, 'நான் ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவரிடம் பேசினாலும் சரி அல்லது ஒரு டீக்கடைக்கு சென்று அந்த டீக்காரரிடம் பேசும் போதும் சரி அவர்களின் ஜாதி என்ன என்பதை பற்றி பேசமாட்டேன்' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அதே ராகுல் காந்தி தற்பொழுது நாடு முழுவதும் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி வந்துள்ளார் என்ற விமர்சனங்களும் 2009 இல் அவர் ஜாதி குறித்து தெரிவித்த கருத்து அடங்கிய வீடியோவும் இணையதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. உதயநிதி எப்படி சனாதனத்தை குறித்து பேசி சிக்கினாரோ அப்படி தற்பொழுது ராகுல் சாதி குறித்த விவகாரத்தில் சிக்கி உள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே உதயநிதி பேசியதால் I.N.D.I A கூட்டணியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் ராகுலின் இந்த விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது. அதுமட்டுமின்றி வடக்கே ராகுல் தெற்கே உதயநிதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது நூற்றுக்கு நூறு உண்மைதான் என விமர்சனங்கள் வேறு எழுந்துள்ளது.காங்கிரஸ் காரிய கமிட்டியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் இப்படி தன் பழைய வீடியோவை மறந்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் பேசியது I.N.D.I.A கூட்டணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.