தெலுங்கானா : மாநில காவல்துறை யில் சேர ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் இருந்தாலும் பலருக்கு வயது வரம்பு நிர்ணயத்தால் காவல்துறையில் சேர வாய்ப்பில்லாமலேயே போய்விடுகிறது. இதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஆந்திர முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் சந்திரசேகர் ராவ் சமீபத்தில் காவல்துறையில் சேர மூன்று ஆண்டுகள் வயது வரம்பு தளர்த்தி அறிவித்திருந்தார். இருந்தபோதிலும் ஐந்து வருடங்கள் தளர்த்த மாநிலம் முழுவதும் பலத்த கோரிக்கை எழுந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் எம்.எல்.சி பல்லா ராஜேஸ்வர் முதல்வரிடம் இதுகுறித்த கோரிக்கை ஒன்றை எழுப்பினார்.
வய்துவரம்பு குறித்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தலைமைச்செயலர் மற்றும் டிஜிபிக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்க்கு முன்னர் தெலுங்கானாவில் காவல்துறையில் சேர் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆக இருந்தது.கடந்த 2018ல் காவல்துறையில் சேர்வதற்கான ஆட்சேர்ப்பு அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தது.
அதில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேர முடியாமல் தவித்தனர். இதனால் மாநில அரசு வயது வரம்பை 30 என மாற்றி அறிவித்தது. இதனால் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் தகுதியற்றவர்களாகிவிடுவார்கள் என அரசின் காதுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று வயதுவரம்பை மேலும் இரண்டு ஆண்டுகள் தளர்த்தி உச்சபட்ச வரம்பு 32 என தலைமை செயலர் சோமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தளர்வுகள் அடுத்த இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் எனவும் அறிவித்துள்ளார். காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை,காலால் மற்றும் போக்குவரத்து துறை என அனைத்து பிரிவுகளுக்கும் இந்த விதி மற்றும் தளர்வு பொருந்தும் என மாநில செயலர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.