24 special

கியான்வாபி : சிவலிங்கத்தை குறித்த சர்ச்சை பதிவு..! கைதான பேராசிரியர்..!


புதுதில்லி : வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் மசூதி வளாகத்தில் இருந்த சிவலிங்கம் தோண்டியெடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்னும் விசாரணை நிலையில் இருக்கையில் இடதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் லிபரல்சுகள் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் விமர்சித்து வருகின்றனர்.


தமிழகத்தில் சென்னையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் மனநல மருத்துவராக இருக்கும் அரவிந்த் என்பவர் சிவலிங்கத்தை படுத்திருப்பவரின் மர்ம உறுப்பை குறிக்கிறது என்ற உள்ளடக்கத்துடன் ஒரு பதிவிட்டிருந்தார். இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஹிந்து கல்லூரியின் வரலாற்று பேராசிரியர் ரத்தன் லால் ஒரு பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் ஒரு சில ரோட்டோர இடங்களை குறிப்பிட்டு இதோ சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுவிட்டது என மேலும் சில வார்த்தைகளை சேர்த்து கிண்டலடிக்கும் விதத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்த புகாரில் ரத்தன் லால் டெல்லி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து ஹிந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மேலும் இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் " தனி ஒருவர் ஒரு குழுவையோஅல்லது ஒரு சமூகத்தையா காயப்படுத்த முடியாது. நையாண்டியுடன் சொல்லப்பட்ட ஒரு கருத்து எந்த சூழலில் எந்த பின்னணியில் செயல்பட்டார் என்பதை கவனிக்கவேண்டும். அவரின் சமூக இடுகை கண்டிக்கத்தக்கது என்றாலும்,

இரு சமூகங்களுக்கு இடையே வெறுப்பை வளர்க்கும் முயற்சி இல்லை என்பதை உணரவேண்டும். இனி குற்றம் சுமத்தப்பட்டவர் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது" என கூறி ரத்தன் லாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.