24 special

இருக்கிற பிரச்சினை போதாது என்று திமுகவை முச்சந்தியில் இழுத்து விட்ட ஆ ராசா!

mkstalin, a rasa
mkstalin, a rasa

2023 திமுக-விற்கு பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்திய காலம் என பரவலாக பேசப்படும் அளவிற்கு திமுக அந்த ஆண்டு பல சரிவுகளை சந்தித்தது தொடர்ச்சியாக ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் பல அரசு ஊழியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் திமுகவின் முக்கிய அமைச்சர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித் துறையின் சோதனை ஆனது அதிரடியாக நிகழ்த்தப்பட்டது அந்த சோதனையின் முடிவில் சில அமைச்சர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர் அதில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி தற்போது வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் அமைச்சர் பொன்முடி தனது பதவியை இழந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் தென் தமிழகத்தில் பெய்த கன மழையால் பெரும் பாதிப்புகளை சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் சந்தித்தது அதிலும் குறிப்பாக இந்த இரண்டு சம்பவங்களுக்குமே மழை குறித்த முன்னறிவிப்புகள் மத்திய அரசு தரப்பில் முன்கூட்டியே வழங்கப்பட்டு அதற்கான போதிய நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க தவறி நடந்ததாக செய்திகளில் வெளியானது தமிழக மக்களை கோபத்தில் ஆழ்த்தியது. 


இந்த நிலையில், சென்னை மக்கள் மழைக்கு அடுத்து பெரும் சிரமத்தை சந்தித்துக் கொண்டிருப்பது போக்குவரத்து நெரிசல் அதிலிருந்து மக்களை காப்பாற்றலாம் மக்களுக்கு ஒரு போக்குவரத்து நெரிசல் இல்லாத சென்னையை கொடுக்கலாம் என்ற ஒரு நம்பிக்கையில் வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தில் சென்னை புறநகர் பேருந்து நிலையத்தை பிரம்மாண்டமாக கட்டியது அந்த பேருந்து நிலையமும் கடந்த டிசம்பர் 30ம் தேதி தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு இனி தென் தமிழகத்திற்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கிருந்து தான் செல்லும் என்றும் கோயம்பேட்டில் உள்ள அனைத்து பேருந்துகளும் படிப்படியாக கிளம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டது, ஆம்னி பேருந்துகள் முதற்கொண்டு அனைத்துமே தற்பொழுது கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது மக்களுக்கு அசோகரித்தையும் கோயம்பேட்டை நம்பியே தனது வாழ்வாதாரத்திற்காக கடைய வைத்திருந்த உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரது வாழ்வாதாரத்தை இழக்கவைத்தது. மக்களும் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து எளிதில் செல்ல முடியவில்லை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறோம் என்று அதிருப்தி தெரிவித்தனர். 

அதோடு திமுகவின் பெரும் நம்பிக்கையாக விளங்கி வந்த IND கூட்டணியும் தற்போது உடைந்து விட்டதால் திமுக சோக கடலில் மூழ்கியுள்ளது. இப்படி 2023 லிருந்து 2024 வரை பெரும் பின்னடைவுகளை சந்தித்து வரும் திமுகவை முச்சந்தியில் நிறுத்துவது போன்ற ஒரு செயலை திமுக நீலகிரி எம்பி ஆ ராசா செய்துள்ளார்.திமுக பொது மேடையில் பேசிக் கொண்டிருந்த நீலகிரி எம்பி ஆ ராசா " நான் ஒன்று சொல்லட்டுமா வரலாறை திரும்பி பாருங்கள்! அதனால் தான் நான் எம்ஜிஆரை மதிப்பதில்லை கலைஞர் கூட என் நண்பர் என்று எம்ஜிஆரை கூறுவார் ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை! வெளிநாட்டில் இருந்து வந்த வெள்ளைக்காரனுக்கு கூட இந்த நாட்டின் மனிதனையும் மாண்பையும் மதிக்க கூடிய பேராண்மை இருந்தது ஆனால் எம்ஜிஆர் என்கிற லூசுக்கு அது இல்லையே!" என்று பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி உள்ளது, மேலும் அதிமுக மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் ஆ ராசாவின் பேச்சு கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக முதல்வர் ஊரில் இல்லா நேரத்தில் ஏன் இந்த வேலை என திமுகவினரே ஆ ராசாவை திட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.