RRR திரைப்படம் வெளியாகி வசூல் மழையை குவித்து வருகிறது பிரபல இயக்குனர் ராஜமவுளி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் NTR கூட்டணியில் வெளியான திரைப்படம் RRR. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ளது கடந்த வாரம் வெளியான இப்படம் ஹிந்தியில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
மொத்தமாக "500 கோடிக்கு" மேல் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன, இது ஒருபுறம் என்றால் இந்த திரைப்படத்தில் ராமர் பிம்பம் மிக பெரிய அளவில் உருவகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், கதாநாயகன் பூணூல் அணிந்தே வருகிறார் என தமிழகத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர், இன்னும் ஒருபடி மேலே சென்று ராஜமௌலியின் சாதியை குறிப்பிட்டும் பேச தொடங்கினர்.
இந்த கதறல் முடிவதற்குள் அடுத்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது RRR படத்தில் ராம் சரண் ஜூனியர் NTR இருவரும் சந்தித்து கொள்ளும் காட்சியில் கொடி ஒன்று பிரமாண்டமாக காட்டப்பட்டு இருக்கும், இந்த கொடியின் வரலாறு தற்போது தெரியவந்துள்ளது, 1907- ம் ஆண்டு காமா, வீராசாவர்கர், ஷ்யாம் கிருஷ்ண வர்மா ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்திய தேசியம் கொடி என்பது தெரியவந்துள்ளது.
அதாவது சாவர்க்கர் அறிமுக படுத்திய தேசிய கொடியைதான் ராஜமௌலி படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் இந்த தகவல் தற்போது தெரியவர ஏற்கனவே கதறிய கூட்டம் தற்போது மீண்டும் கதறி வருகிறது அட பாவிங்களா ஒரு படத்தில் இத்தனை ட்விஸ்ட்டா என சில திராவிட ஸ்டாக்ஸ் மேலும் மேலும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், பூணூலுக்கே கொந்தளித்த சீப்புகள் தற்போது கொடியின் வரலாறு தெரிந்தால் என்ன செய்ய போகிறார்கள் என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்க துவங்கியுள்ளனர்.
படத்தை படமாக பார்க்கவேண்டும் என பாடம் எடுத்த பலரும் RRR திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை விமர்சனம் செய்வதும் பதிலுக்கு பதிலடி வாங்குவதும் என பொழுதை கழித்து வருகின்றனர், சில திராவிட ஸ்டாக் விமர்சகர்கள். வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.