தமிழக ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாத காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது, முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து நடைபெற்ற விவாதம் ஒன்றில் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கலந்து கொண்டார். நெறியாளராக செந்தில் கேள்விகளை எழுப்பினார்.
தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு வந்த போது தமிழ்மணி கூறிய கருத்துக்களால் செந்தில் என்ன கேள்வி கேட்பது என தெரியாமல் டிரம்ப் சித்தப்பா மகன் என்றெல்லாம் பேசியது நகைப்பை உண்டாக்கியது, முதல்வர் வெளிநாடு சென்றது நல்ல விஷயம் அவரது மனைவி சென்றதும் தவறில்லை ஆனால் பேரன்,பேத்தி, மருமகன். மருமகள் என ஒரு படையே அரசு நிகழ்ச்சிக்கு சென்றது தவறு.
சொந்த பணத்தில் சென்றால் யாரும் கேள்வி கேட்கப்போவது இல்லை ஆனால் இவர்கள் அரசு விருந்தினராக சென்று இருப்பதால்தான் கேள்வி கேட்கிறோம் என குறிப்பிட்டார் தமிழ்மணி இதற்கு பதில் கேள்வி எழுப்பிய செந்தில் டிரம்ப் குஜராத் வந்தார், சீன அதிபர் தமிழகம் வந்தார் அப்போதெல்லாம் அவர்கள் உடன் யாரையும் அழைத்து வரவில்லையா? ஏன் முதல்வர் ஸ்டாலின் அழைத்து சென்றால் தவறா என கேள்வி எழுப்பினார் செந்தில்.
இதற்கு தமிழ்மணி ஒரே வார்த்தையில் டிரம்ப் எந்த பேரனை அழைத்து வந்தார் சொல்லுங்கள் என கேட்க பதில் சொல்லமுடியாமல் பேந்த பேந்த முழித்தார் செந்தில், அப்போதுதான் உலகம் வியக்கும் ஒரு கேள்வியை கேட்டார், டிரம்ப் இந்தியா வரும் போது கூட ஒண்ணுவிட்ட சித்தப்பா மகனை கூட்டி வந்தார் தெரியுமா என யாருக்கும் தெரியாத தகவலை கேள்வியாக பகிர்ந்தார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது, திசை மாற்ற கேள்விகளை எழுப்பிய செந்தில் தமிழ்மணியின் பதில்களால் பார்வையாளர்கள் மத்தியில் அம்பலப்பட்டு போகினார். கீழே வீடியோ காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.