தமிழ் சினிமாவில் இன்றியமையாத ஒரு காமெடி நடிகராக அறியப்படும் நடிகர் வைகைப்புயல் வடிவேலு. தனது குழந்தை மற்றும் பள்ளி பருவம் முழுவதையும் ஏழ்மையிலேயே கடந்து வந்த வடிவேலு நண்பர்களுடன் இணைந்து சிறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றி உள்ளார். மேலும் அந்த நாடகங்களில் நகைச்சுவை கதாநாயகனாகவும் நடித்து வந்துள்ளார் வடிவேலு. அதற்குப் பிறகு ஒருமுறை ராஜ்கிரணின் அறிமுகம் வடிவேலுக்கு எதிர்பாராத விதமாக கிடைக்க அவர் மூலம் சென்னைக்கு வந்து ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என எல்லா வேலைகளையும் பார்த்து வந்துள்ளார். இதனை அடுத்து டி ராஜேந்திரன் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதோடு ராஜ்கிரன் தான் நடித்த என் ராசாவின் மனதிலே என்ற திரைப்படத்திலும் வடிவேலுவை ஒரு காமெடி நடிகராக அறிமுகப்படுத்தினார்.
ராஜ்கிரணை தொடர்ந்து விஜயகாந்தும் தனது பெரும்பாலான படங்களில் வடிவேலுவை இணைத்துக் கொள்ள வடிவேலுக்கு தொடர்ச்சியான வெற்றி கிடைத்தது. இதனால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்த கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் வடிவேலு. ஒரு பக்கம் கவுண்டமணி, செந்தில், விவேக் என காமெடி நடிகர்கள் வலம் வந்து கொண்டிருந்தாலும் வடிவேலு தனக்கென்று ஒரு தனி இடத்தையும் தமிழ் சினிமாவில் பிடித்தார். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வடிவேலுவின் உடல் பாவனைக்கும் காமெடிக்கும் இன்றளவும் ரசிகர்களாக உள்ளனர். இருப்பினும் ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்ட வடிவேலு விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து பேசியது வடிவேலுவின் பட வாழ்க்கைக்கு பெரிய அடியை கொடுத்தது.
இதனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரால் எந்த படத்திலும் நடிக்க முடியாமல் போனது, அதுமட்டுமின்றி விஜயகாந்த் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததால் மதுரையை விட்டு வேறு எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்றி கொடுத்துள்ளார் வடிவேலு. இதற்கு முன்பாகவே இரண்டு படங்களில் நடித்திருந்தார். ஆனால் அப்படங்களில் பெரும் அளவிலான வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் மாமன்னன் திரைப்படத்தில் அவர் எடுத்துக்கொண்ட கதாபாத்திரம் வடிவேலுவுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தன் மகனின் சினிமா வாழ்க்கையே பறிபோவதற்கு வடிவேலு தான் காரணம் என்று குற்றம் சாடி உள்ளார். அதாவது தயாரிப்பாளர் வி சேகர் தன்னுடைய மகன் விவேக்கை வைத்து ஒரு படத்தை இயக்கி தயாரிக்க முடிவு செய்தார் அந்தப் படத்திற்கு சரவணப் பொய்கை எனவும் பெயரிடப்பட்டது இந்த படத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் கண்டிப்பாக நீங்கள் நடிக்க வேண்டும் என வடிவேலுவிடம் வி.சேகர் மிகுந்த கோரிக்கையுடன் கேட்டதாகவும், அதற்கு வடிவேலுவும் கண்டிப்பாக நடித்துக் கொடுக்கிறேன் என வாக்குறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வடிவேலுவின் பேச்சை நம்பி வி சேகர் இந்த படத்தையின் பணிகளையும் துவங்கவிட்டார்.
ஆனால் இந்த படப்பிடிப்புகள் துவங்கும் சமயத்தில் வடிவேலுவை அழைத்த பொழுது அவர் விஜயகாந்தை குறித்து தேவையில்லாமல் பிரச்சாரத்தில் பேசி விட்டதால் திரை உலகில் காலடி வைக்க பயந்து எந்த படத்திலும் நடிக்காமல் மதுரையை விட்டு வெளியே வரவில்லையாம்! அதனால் வி சேகர் வடிவேலுக்கு பதிலாக வேறு ஒரு காமெடி நடிகரை வைத்து அந்த படத்தை இயக்கி முடித்தாராம். இருப்பினும் அந்த படத்தில் வடிவேலு நடித்திருந்தால் நிச்சயம் சரவண பொய்கை திரைப்படம் நல்ல வரவேற்பை கண்டிருக்கும் என் மகனுக்கும் திரையுலக வாழ்க்கை பிரகாசமாக இருந்திருக்கும் என வி சேகர் சமீபத்தில் பேசிய ஒரு பேட்டி ஒன்றில் வடிவேலுவின் நம்பிக்கை துரோகத்தை தெரிவித்துள்ளார்.