24 special

ஆளுதான் பார்க்க ஒரு மாதிரி எப்பா என்ன ஆட்டம்...

VIJAY
VIJAY

முன்பெல்லாம் நடிப்பது நடனம் ஆடுவது போன்றவற்றை மக்கள் ரசித்து பார்க்க வேண்டும் என்றால் அதில் இருப்பவர்கள் மிகவும் அழகாகவும் சரியான உடல் அமைப்போடும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. அதிலும் டான்ஸ் ஆடுபவர்கள் ஸ்லிம்மாக இருந்தால் தான் சூப்பராக ஆடுவார்கள் என்ற ஒரு மனநிலையும் இருந்து வந்தது. மேலும் அவர்களின் அக்கவுண்டுகளில் அவர்களுக்கு எது மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ அது குறித்த வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் அதனை பார்ப்பவர்களும் முன்பு இருந்ததைப் போல இவர்கள் அழகாக இருக்கிறார்களா?? குண்டாக இருக்கிறார்களா ஒல்லியாக இருக்கிறார்களா என்றெல்லாம் பார்க்காமல் திறமை இருக்கிறதா?? என்று பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதனால் அனைவருமே எந்தவித எண்ணமும் இல்லாமல் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். 


இவ்வாறு பலரும்  வீடியோக்களை பதிவிட்டு வரும் சமயத்தில் தற்போது மிகவும் குண்டாக உள்ள ஒரு பெண் சினிமா பாடல்களுக்கு மிகவும் அருமையாக நடனமாடி வருகிறார். பொதுவாக குண்டாக இருப்பவர்களால் டான்ஸ் ஆட முடியாது என்றும், அவர்களுக்கு சில ஸ்டெப்புகள்  மிகவும் கடினமாக இருப்பதால் சரியாக வராது என்றும் பலரின் மனநிலை இருந்து வந்தது. ஆனால் அவற்றையெல்லாம் உடைக்கும் விதமாக எல்லா ஸ்டெப்புகளும் சூப்பராக போட்டு அனைவரின் கவனத்தையும் ஒரு பெண் ஈர்த்து வருகிறார்!! அவர் யார்?? என்பது குறித்து விரிவாக காணலாம்!!

Snazzy thamilachi என்ற youtube சேனலை நடத்தி வரும் பெண் ஒருவர் தனது தினசரி வாழ்க்கை போன்றவற்றை பதிவு செய்து வீடியோவாக யூட்யூப் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பதிவேற்றி வருகிறார். மேலும் அவர் பல பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவது போன்ற செயல்களையும் செய்து வருகிறார். அவர் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக இருந்தாலும் கூட அவருக்கு உள்ள திறமையை அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது. தொடர்ந்து மேக்கப் வீடியோக்கள், தினசரி வாழ்வில் என்னென்ன செய்கிறார், ஷாப்பிங் செய்வது போன்ற பல செயல்களை வீடியோவாக எடுத்து பதிவேற்று ரசிகர்களை பெற்று வருகிறார். இவரின் youtube சேனலுக்கு தற்போது 2.51 மில்லியன் சப்ஸ்கிரைபர்களும் இருந்து வருகின்றனர். 

இவரின் உடல் எடையை கண்டுகொள்ளாமல் எல்லா சினிமா பாடல்களுக்கும் சூப்பராக வளர்ந்து மிளிர்ந்து டான்ஸ் ஆடுவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பாடலுக்கு ஏற்றது போல முகத்தில் ரியாக்ஷனும் செய்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதனால் அவரின் ரிலீசிகளை பார்ப்பவர்கள் இவங்களால இப்படி கூட  சூப்பரா டான்ஸ் ஆட முடியுமா அப்படின்னு ஆச்சரியமாக நினைக்கின்ற அளவிற்கு இவரின் பர்பாமன்ஸ் இருந்து வருகிறது. பொதுவாக குண்டாக இருப்பவர்கள் ஆட முடியாது என்று இருந்து வந்த பின்பத்தை இவர் உடைத்து எறிந்து விட்டார் என்றே கூறலாம். இவர் சமீபத்தில் கில்லி திரைப்படம் ரீரிலீஸ்  செய்யப்பட்ட சமயத்தில் அந்த படத்தில் அமைந்திருக்கும் ஷாலல்லா ஷாலல்லா பாடலில் திரிஷா போட்டிருக்கும் மேக்கப் போலவே இவரும் ரீ கிரியேட் செய்திருந்தார். அதேபோல மேக்கப் செய்து அந்த பாடலுக்கு சூப்பராக ஆக்டிங் செய்து வீடியோவை பதிவிட்டு இருந்தார். இது அதிக அளவில் மக்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் பாடல் ஒன்றை ரீ கிரியேட்  செய்துள்ளார். 

அதாவது துள்ளாத மனமும் துள்ளும் என்ற விஜய் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் அமைந்திருக்கும் மேகமாய் வந்து போகிறேன் என்ற பாடலுக்கு இன்று அளவிலும் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பாடலுக்கு சூப்பராக விஜய் போலவே டான்ஸ் ஆடி வீடியோவை பதிவிட்டது மட்டுமல்லாமல் அவரின் முகத்தில் ரியாக்ஷனும் சூப்பராக கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.