24 special

ராமேஸ்வரத்தில் அரங்கேறிய சம்பவம், மீண்டும் வசமாக சிக்கிய திமுக...!

mk stalin, amitshah
mk stalin, amitshah

சில மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேலூர் மாவட்டத்தில் நடைபெற இருந்த பாஜக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தடைந்தார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்று கொண்டிருந்த பொழுது கட்சித் தொண்டர்களை பார்த்தபடி காரில் இருந்து இறங்கி தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி நடந்துசென்றார் அப்போது திடீரென்று மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் இருட்டாக காட்சியளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் அவ்விடத்தில் நின்று தொண்டர்களின் டார்ச் உதவியுடன் திரும்பினார். இந்த சம்பவம் காரணமாக பாஜக தொண்டர்கள் மத்தியில் கோபத்தை ஏற்பத்தியது. இதனால் அப்பகுதி முழுவதும் பரப்பானது. மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து தமிழக மின்சார வாரியத்திற்கு நோட்டீஸ் பறந்தது.


இந்த நோட்டீசிற்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது, அதற்கு பிறகு மின்சார துறையிலிருந்து மத்திய அமைச்சர் வரும்பொழுது ஏற்பட்ட மின்தடை பழுது காரணத்தாலே ஏற்பட்டது வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று கூறப்பட்டது. மறுபுறம் இந்த சம்பவம் அரங்கேறிய ஒரு வாரத்தில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை வருமானவரித்துறை அதிகாரிகள் இறங்கி சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது, அதற்குப் பிறகு அவர் வழக்குகளை சந்தித்து மருத்துவமனையில் இருந்து தங்கி நீதிமன்ற காவலுக்கு வந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜாமின் மனுவும் விசாரிக்கப்பட்டு அந்த ஜாமின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் எட்டாவது முறையாக அவரது நீதிமன்ற காவலும் நீடிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேற்றைய முன் தினம் அக்டோபர் 15ம் தேதி  மகாளய அமாவாசை தினம் வந்தது, அன்றைய தினம் புனித திருத்தலங்களில் கோடிக்கணக்கான மக்கள் குவிந்து தனது முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அப்படி ராமேஸ்வரத்தில் நேற்றைய முன்தினம் தமிழகம் முழுவதும் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். அந்த நிலையில் ராமேஸ்வரத்தில் நள்ளிரவு 12 மணி முதல் மின்சாரம் இல்லாததால் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர், கிட்டத்தட்ட அந்த மின்தடை என்பது ஏழு மணி நேரம் நீடித்துள்ளது என்றும் இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்கும் ஒரு இடத்தில் 7 மணி நேரமாக மின்சாரம் தடைப்பட்டு இருப்பது மின்சார துறையின் அலட்சியத்தை காட்டுகிறது என்றும் இதற்கு மாற்று ஏற்பாடுகள் ஏதாவது செய்திருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்த விவகாரம் ராமேஸ்வரம் பகுதி மக்கள் மத்தியில், அங்கு வந்த பக்தர்கள் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது, ஏற்கனவே அண்ணாமலை ராமேஸ்வரத்தில் என் மண் என் என் மக்கள் நடை பயணத்தை தொடங்கிய பொழுது ஏராளமான மக்கள் கூடியிருந்து அண்ணாமலையை வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ராமேஸ்வரத்தில் திமுகவிற்கு எதிரான ஒரு அலையை உறுதிப்படுத்தி விட்டார் என்றுதான் முதல்வர் அங்கு உடனடியாக சென்று மீனவர் நிகழ்ச்சியை நடத்தினார், இந்த நிலையில்  தற்பொழுது மின்தடை என்ற விவகாரத்தால் மேலும் ராமேஸ்வரத்தில் திமுக பின்னடைவை சந்தித்துள்ளது என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கு முன்பாகவே அமித்ஷா வருகையின் பொழுது ஏற்பட்ட மின்தடையால் அமைச்சர் செந்தில்பாலாஜி சிக்கியது போல் இந்த முறை ராமேஸ்வரத்தில் மகாளய அம்மாவாசை அன்று நிகழ்த்தப்பட்ட மின்தடை கண்டிப்பாக திமுகவை ஒரு வழி செய்து விடும் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன...