24 special

உதயநிதிக்கு பதிலடி கொடுத்த ஷ்யாம் கிருஷ்ணசாமி.....இனிமேல் நீ வாய திறப்ப!

udhayanithi, sham krishnasamy
udhayanithi, sham krishnasamy

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் என்றாலே இந்தியா vs  பாகிஸ்தான் நாடு மோதிக்கொள்ளும் போட்டியினை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காணுவர். அந்த வகையில் நேற்று முன்தினம் இந்தியா vs பாகிஸ்தான் நாடுகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரதமர் மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் இந்தியா பௌலிங்-யை தேர்வு செய்தது. பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களின் பந்தை எதிர்கொள்வதில் சிரமப்பட்டு விக்கெட்டை கொடுத்து பெவிலியன் திரும்பினர்.இந்த போட்டியின் நடுவே இந்திய ரசிகரக்ள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷத்தை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் வீரர்கள் அவுட் ஆகி செல்லும்போதும்  'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷம் எழுப்பினர்.


இப்படி இந்திய ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது, பாகிஸ்தான் வீரர்களுக்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனால், மக்களின் மனநிலை என்னவாக இருக்கு என்றால் பாகிஸ்தான் சாதரண நாடு கிடையாது இந்த நாட்டின் மூலம் இந்தியாவிற்கு ஏற்பட்ட தொல்லைகள் அதிகம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், "2017-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டியின் போது இந்திய அணி தோல்வி அடைந்து பவுலியன் திரும்பும்போது பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய வீரரை உங்க அப்பன் யாரு? என்று கிண்டல் அடித்து இழிவான முறையில் நடந்து கொண்டனர்.பாகிஸ்தானில் நம் நாட்டு வீரர்களை கற்களால் அடித்த நிகழ்வுகள் உதயநிதிக்கு தெரியுமா? கிரிக்கெட் போட்டி மட்டுமின்றி ஹாக்கி விளையாட்டின் போது பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோற்றவுடன் பாகிஸ்தான் வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் இழிவான ஆபாச சைகைகள் காட்டினார்கள் இது போன்று பழைய விஷயங்களை கருத்தில் கொண்டு இந்திய ரசிகர்கள் அப்போதெல்லாம் உதயநிதி எங்கே சென்றார்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். 

முன்னதாக பாகிஸ்தான் போர் தொடர்ந்த போது இந்தியாவில் உயிரிழப்புகள் அதிகம் குறிப்பாக  2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரக விமானத்தில் பறந்து கொண்டிருந்த அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து விட்டார் என்று பாகிஸ்தானியர் அவரை சிறைபிடித்து தொந்தரவு அளித்து பின்னர் விடுவித்தனர். இப்படி சிறைபிடிப்பவர்களை எல்லாம் "இஷா அல்லா" என்று கோஷத்தை கூற சொல்லி சித்திரவதை செய்து இருக்கின்றனர்.அவர்கள் இஷா அல்லா சொல்லும்போது தவறில்லை என்றால் இங்கே "ஜெய் ஸ்ரீ ராம்" சொல்லுவதில் எந்த வித தவறும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக  உடனடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருந்தார். இது பற்றி அவர் கூறுகையில் "சனாதனத்தை பற்றி பேசும் உதயநிதிக்கு பாகிஸ்தானை பற்றி பேசுவதற்கு அதிகாரம் இல்லை, விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்" என்று கூறி பதிலடி தெரிவித்தார்.

 தற்போது  புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவர் சியாம் கிருஷ்ணசாமி ஒரே வரியில் உதயநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, "பாகிஸ்தான் வெறும் ஒரு அண்டை நாடோ மற்றொரு இஸ்லாமிய நாடோ அல்ல.. அது இந்து’க்களுடன் ஒன்றி வாழ சகிப்புத்தன்மை இல்லாத கருத்தியல்!  அந்த கருத்தில் தோற்கடித்துக் கொண்டே இருக்கப்படும்! ஒவ்வொரு வெற்றியும் இந்தியர்களால் கொண்டாடப்படும்!" என்று கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் தலைவர்கள் பலர் உதயநிதிக்கு எதிராக கருத்தை தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாக முன்பு சானதனம் குறித்து பேசியது சர்ச்சை ஆன நிலையில் தற்போது விளையாட்டு பற்றி ஏதும் தெரியாமல் பேசி மாட்டி கொண்டார். இவருக்கெல்லாம் எதற்கு அமைச்சர் பதவி என்று கருத்துக்களை முன் வைகின்றனர்.