24 special

மகளிர் உரிமை மாநாடு நடத்திய கனிமொழிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்த தமிழிசை...! அஸ்திவாரமே காலி...!

kanimozhi, tamilisai
kanimozhi, tamilisai

சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஏற்பாட்டில் இருந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முக்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இது மட்டும் அல்லாமல் இந்த மாநாடு தேசிய அளவில் திமுக தரப்பில் விளம்பரப்படுத்தப்பட்டது, அதற்கு சில பின்னணியில் சில காரணங்களும் கூறப்பட்டது. இந்த மாநாட்டில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினும் கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, 'ராஜீவ் காந்தி அவர்கள் பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க 33% இட ஒதுக்கீடை கொண்டு வந்தார்.


இது அடிமட்டத்தில் பெண்கள் தலைமை இடங்களில் நுழைவதற்கு முற்றிலும் புதிய கதவை திறந்தது' எனக் கூறினர். மேலும் சோனியா காந்தி பேசும் பொழுது மக்களவை இட ஒதுக்கீட்டில்  மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என இந்திய தேசிய காங்கிரஸ் முன்னோடியாக இருந்து வழிநடத்தியது ஒரு முக்கிய படியாகும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒருமித்த கருத்து இல்லாததால் மக்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது. எங்களின் இடைவிடாத முயற்சியால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா இறுதியாக நிறைவேற்றப்பட்டது ஆனால் அரசாங்கம் காலக்கெடுவை குறிப்பிடாததால் இன்னும் நீண்ட காத்திருப்பு உள்ளது' என குறிப்பிட்டார். 

மேலும் காந்தி, மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு ஆகியோர் பெண்கள் விடுதலைக்காக போராடினார் எனவும் குறிப்பிட்டு பேசினார். மேலும் சோனியா காந்தி பேசும் பொழுது தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, அண்ணாதுரை ஆகியோர் பெயரை குறிப்பிட்டு பேசினார். இந்த விவகாரம் தான் தற்பொழுது கனிமொழிக்கு எதிராக திரும்பி விட்டது. இப்படி சோனியா காந்தி பேசியதை விமர்சித்து குறிப்பிட்டு விமர்சித்துள்ள தமிழிசை ஒரு கிளப்பிய ஒரு கேள்வி தான் தற்பொழுது கனிமொழிக்கு எதிராக அவரது தொகுதியிலேயே திரும்பி உள்ளது, இந்த நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் பதிவில் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பும் பொழுது இந்த மாநாட்டில் மறைந்த பெருந்தலைவர் காமராஜர் குறித்து சோனியா காந்தி எதுவும் குறிப்பிடவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். 

மேலும் அதற்கான வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் குறிப்பிடும் பொழுது, 'சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பெண்களை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் போது தமிழகம் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி பெயரை குறிப்பிட்டார்கள். ஆனால் கிராமப்புற குழந்தைகளுக்கு வசதியாக 18,000 பள்ளிகளை திறந்து கல்வியில் சம வாய்ப்பு அளித்ததன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வலுவான அடித்தளத்தை அமைத்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்த முன்னாள் முதல்வர் கர்மவீரர், கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன் என ஆளுநர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார். 

இந்த விவகாரம் தற்போது தூத்துக்குடி பகுதியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, காரணம் தூத்துக்குடி பகுதியில் பெரும்பான்மையினர் என கருதப்படும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு காமராஜர் பெயரை குறிப்பிடாதது அதுவும் குறிப்பாக கனிமொழி ஏற்பாடு செய்த மாநாட்டில் காமராஜர் பெயர் இல்லாதது அதிர்ச்சி அளித்துள்ளது, ஏற்கனவே கனிமொழி தூத்துக்குடி எம்.பி இது மட்டுமல்லாமல் வரும் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை குறிவைத்து வேலை செய்து வரும் கனிமொழிக்கு இந்த விவகாரம் வரும் காலங்களில் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது. மாநாடு நடத்துகிறேன் என்ற பெயரில் காமராஜரை அவமதித்துவிட்டார் என தமிழிசை கொடுத்த அஸ்திரம் திறம்பட வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர், வரும் தேர்தலில் கூட இது எதிரொலிக்க வாய்ப்பிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.