24 special

தியேட்டர் கிடைக்காமல் சிக்கிய ரத்தினம் படம்.. ஹரிக்கு இந்த நிலைமையா..?

Vijay, Vishal
Vijay, Vishal

தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால், சினிமாவில் அக்க்ஷன் முகத்துடன் சுற்றி வரும் இவர் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்தினம் என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் இன்று வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி என்பது கேள்வி குறிக்கு தள்ளப்பட்டிற்கு இதற்கு காரணம் நடிகர் விஜய் என ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.


தளபதி, புரட்சி தளபதி என தமிழ் சினிமாவில் விஜய், விஷால் இருவரும் ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக விஜயின் தீவிர ரசிகராக விஷால் இருக்கிறார். விஜயை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என ஆசைப்பட்டேன் அதற்குள் விஜய் அரசியலில் நுழைந்ததால் வாய்ப்பு கிடைக்காமல் போனதாக நிகழ்ச்சி ஒன்றில் விஷால் அவரே கூறினார். மேலும் அரசியலிலும் விஜய்க்கு பக்கபலமாக இருப்பேன் என முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில், விஜயை தொடர்ந்து நடிகர் விஷாலும் தனித்து அரசியலில் வருவதாக கூறினார். தொடர்ந்து அரசியல் குறித்து பேசி வரும் விஷால் அவருக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த சூழ்நிலையில், இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ரத்தினம். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி படத்தை விட ரத்தினம் படத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

ஹரி இயக்கத்தில் ஏற்கனவே தாமிரபரணி மற்றும் பூஜை படங்களில் விஷால் நடித்துள்ளார். 3வது முறையாக ஹரியுடன் கூட்டணி வைத்து ஹாட்ரிக் அடிக்கலாம் என நினைத்த விஷாலுக்கு அவர் கனவில் மண் விழுந்தது தான் மிச்சம் என்கிற நிலையில் தான் ரத்னம் படம் உள்ளது. டாக்டர் கனவோடு படிக்கும் பிரியா பவானி சங்கருக்கு ஏற்படும் பிரச்சனையை மையமாக கொண்டு கதை நகர்கிறது. ரத்தினம் படத்தை பார்த்த மக்கள் காது, மூக்கில் ரத்தம் வருவதாக கூறுகிறார்கள். அந்த வகையில் இன்று வெளியான படத்திற்கு பெரியதளவில் ஆதரவு கிடைக்வில்லையாம்.

இதற்கு முக்கிய காரணம் விஜய் தான் என கூறப்படுகிறது, ஏனெனில் விஜய் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான கில்லி படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மக்கள் ஆரம்பத்தில் கொடுத்த வரவேற்பை விட தற்போது தான் அதிகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக இன்னமும் வந்து கொண்டிருக்கிறார்கள். தினமும், தியேட்டர்களில் மக்கள் படையெடுப்பதால் தியேட்டர் உரிமையாளர்களும் புதிய படத்தை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் ரத்தினம் படத்திற்கு தியேட்டர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் விஷாலும் மன வருத்தத்தில் தயாரிப்பாளர்கள் குறித்தும் படக்குழு குறித்தும் வருத்தம் தெரிவித்தது போல் ஆடியோ ஒன்று வெளியானது. அதில், தியேட்டர்கள் ஆளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக ஓப்பனாக பேசியிருந்தார். இது நெருங்கிய நண்பரான உதயநிதி ஸ்டாலினுக்கு பொருத்தமாக இருக்கும் என நெட்டிசன்கள் எல்லாம் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கில்லி படத்தை தாண்டி ரத்தினம் படம் மீண்டு தமிழ் சினிமாவை மேலே தூக்கிவிடுமா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.