24 special

சீனாவிற்கு பதிலடி! மூன்றாவது முறையாக பதவியேற்றதும் இறங்கி அடித்த மோடி!

PMMODI
PMMODI

இந்தியாவில் தேர்தல் நடைபெற்று வந்த நேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில்  உள்ள இடங்களில்  சீனா புதிய பெயர்சூட்டியது  இதை வைத்து எதிர்க்கட்சிகள் இங்கு அரசியல் செய்தன.தேர்தல் நேரத்தில் சீனா செய்த செயல் நாட்டிற்கு எதிராக செய்ததா இல்லை மோடி  அரசினை கவிழ்க்க வேண்டும் என்பதற்ககாகவா என்ற கேள்வி எழுந்தது இந்நிலையில் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திபெத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு புதிய பெயர் சூட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது.இதற்கு மோடியும் அனுமதி அளித்துவிட்டார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறிவரும் சீனா அங்குள்ள பல இடங்களுக்கு தன்னிச்சையாக புதிய பெயரை சூட்டி வருகிறது.சீனா கடைசியாக கடந்த மார்ச் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு நெடுகிலும் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள்,ஓர் ஏரி, ஒரு கனவாய் மற்றும் ஒரு நிலப் பகுதிக்கு புதிய பெயர்களை சூட்டியது.


சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அங்குள்ள இடங்களுக்கு மறுபெயர் சூட்டுவதால் யதார்த்த நிலை எந்தவிதத்திலும் மாறிவிடாது என்றும் வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு வருகிறது.இந்த நிலையில், புதிதாக பதவியேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, திபெத்தின் 30 இடங்களுக்கு மறுபெயர் சூட்டும் பரிந்துரைக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. அருணாசலப் பிரதேசத்தில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகக் கூறி சில பகுதிகளுக்கு சீனா பெயர் வைத்து, இந்தியாவை வெறுப்பேற்றியதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் செய்யப்பட உள்ள இடங்களின் பட்டியல் ராணுவத்தின் மூலம் இறுதி செய்யப்படும் சீனாவின் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு பதிலடி தர மத்திய அரசு முழு வேகத்தில் தயாராகி விட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற சூட்டோடு சூடாக, சீனாவுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.திபெத் பிராந்தியத்தின் வரலாற்று ஆராய்ச்சி அடிப்படையில் சூட்டப்பட்டுள்ள இந்த பெயர்களை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.இந்த புதிய பெயர் பட்டியலுடன் கூடிய எல்லை கட்டுப்பாட்டு பகுதியை வரையறுக்கும் வரைபடத்தையும் நம் ராணுவம் விரைவில் வெளியிட உள்ளது.இது குறித்து நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான உறவு மற்றும் சிக்கல்கள் வெவ்வேறானவை. சீனாவுடன் தொடர்ந்து வரும் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதே எங்கள் நோக்கம்.ஆனால், பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட முயற்சித்து வருகிறோம். என கூறினார்.