தமிழ் சினிமாவில் எண்பதுகளில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்களில் சிலர் திரை உலகை விட்டு சற்று தள்ளியும் இருந்திருக்கின்றனர். மீண்டும் ஒரு ரீ என்ட்ரி கொடுத்து திரை துறையை திரும்பிப் பார்க்க வைத்து வருகின்றனர். அந்த வகையில், எண்பதுகளில் டாப் ஹீரோக்களாக இருந்த சூப்பர் ஸ்டார் மற்றும் ரஜினிகாந்த் இருக்கே டஃப் கொடுக்கும் போட்டியை கொடுத்து வந்த மோகன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா துறையை விட்டு விலகினார். 1980களில் மிகவும் ட்ரெண்டிங் ஹீரோவாக வலம் வந்த மோகன் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்து வெள்ளிவிழா கண்ட நாயகனாகவும் வளம் வந்தார். ஏனென்றால் இவர் நடித்து வெளியான திரைப்படங்கள் பல 200 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டது. மேலும் இதனால் பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார் மோகன்! அதுமட்டுமின்றி தான் நடிக்கும் திரைப்படங்களில் மைக்கை பிடித்து பாடும் காட்சிகளை கண்டிப்பாக இடம் பெற வைத்து விடுவார். அதனால் இவருக்கு மைக் மோகன் என்ற ஒரு பெயரும் இருந்து வந்தது.
இருப்பினும் அவருடைய அந்த வெற்றியானது 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்தது. அதற்கு பிறகு தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வந்த மோகன் திரையின் நடிப்பதை தவிர்த்து வந்தார். மேலும் பல இயக்குனர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலமுறை மோகனை திரை உலகிற்கு மீண்டும் அழைத்தும் அவை அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார் மோகன். இந்த நிலையில் தற்போது ஹரா திரைப்படத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள மோகன் பல யூட்யூப் சேனல் மற்றும் தனியார் பத்திரிகை நிறுவனங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மோகன் தான் திரை உலகை விட்டு விலகி இருந்த நேரங்களில் தனக்கு எய்ட்ஸ் வந்ததாகவும் சிலர் நான் இறந்து விட்டதாகவும் புரணியை கிளப்பினார்கள். ஆனால் என்னை சுற்றி இருந்தவர்களுக்கும் எனது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என்னைப் பற்றி தெரியும். அதனால் நானும் அது குறித்து கவலை கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மற்றுமொரு பேட்டியில் மற்றுமொரு பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார் மோகன்.
அதாவது இயக்குனர் மணிரத்தினம் மற்றும் மோகன் கூட்டணியில் வெளியான மௌன ராகம் திரைப்படம் எந்த அளவிற்கு ஹிட் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை, ஏனென்றால் காலம் கடந்தும் அந்த திரைப்படம் இன்றளவும் பலரின் ஃபேவரட் படமாக உள்ளது. இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியையும் மோகன் கண்டார். மணிரத்தினத்திற்கும் இந்த திரைப்படம் ஒரு முக்கிய திருப்புமுனையை கொடுத்தது. இதனால் இதன் தொடர்ச்சியாக அஞ்சலி என்ற திரைப்படத்தில் மீண்டும் மோகன் நடிக்க மணிரத்தினம் அழைத்த பொழுது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், அஞ்சலி திரைப்படத்தில் பேபி ஷாலினி ஒரு சேலஞ்சிங் குழந்தையாக ஒரு தனி அறையில் அடைக்கப்பட்ட காட்சிகள் படத்தில் இடம்பெற்று இருப்பதால் எனக்கு அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் அந்த திரைப்படத்தில் நான் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். மௌன ராகம் திரைப்படத்தில் இணைந்து வெற்றி கண்ட இந்த குழு மீண்டும் இணைந்து இருந்தால் நிச்சயமாக அந்த திரைப்படம் மோகனுக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்திருக்கும். ஆனால் அதை மோகன் தவற விட்டுவிட்டார் என்பது நிதர்சன பேச்சு, ஏனென்றால் ரகுவரன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் பல விருதுகளை அள்ளி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.