ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தான் தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இது குறித்து வினோத் என்கின்ற ரவுடியை போலீசார் கைது செய்திருந்தாலும் இந்த விவகாரத்தில் போலீஸ் தரப்பிற்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே கூறப்படும் தகவல்களில் பல முரண்பாடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆளுநர் மாளிகை தரப்பு இது குறித்து கூறும்போது, 'நுழைவுவாயில் முன்புறம் தாக்கப்பட்டுள்ளதாக சேதமடைந்துள்ளது ஆனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மறுக்கிறார்கள்! தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பிவிட்டனர்' என கூறினாலும் போலீஸ் தரப்பில் இருந்து நுழைவுவாயிலின் முன்பு தாக்குதலில் ஒருவர்தான் ஈடுபட்டார், அதுவும் ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயிலுக்கு முன்புறமுள்ள சாலையில் தான் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்குதல் நடத்தியவுடன் நாங்கள் தாக்குதலில் ஈடுபட்டவரை கைது செய்து விட்டோம்' என சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
இப்படி ஆளுநர் மாளிகை முன்பு தாக்குதல் நடந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கும் காவல் துறைக்கும் இடையே வெளியிடப்படும் தகவல்களில் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் சூழலில் திமுக அமைச்சரவையில் இருந்து ஆளுநரை கடுமையாக விமர்சித்து வந்த சூழலில் திடீரென உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று மாளிகை சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திடீரென நேற்று தாக்குதல் நடந்த நிலையில் இன்று காலை சென்றது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பல்கலைக்கழக விவகாரங்களில் உயர்கல்வித்துறை அமைச்சருக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவியுள்ளன, இந்நிலையில் அசாதாரண சூழ்நிலையில் அமைச்சர் பொன்முடி ஆளுநர் மாளிகைக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநர் மாளிகைக்கு சென்றதற்கான காரணம் குறித்து விசாரித்த பொழுது வேறு காரணம் இருக்கிறது என்கின்றனர் திமுக தரப்பினர். இது குறித்த அவர்கள் கூறும் பொழுது குடியரசுத் தலைவர் திரௌபதி பெங்களூரில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தடைந்தடைந்தார், அவரை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் வரவேற்றனர்.
அங்கிருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு காரில் சென்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு அங்கு தங்கியுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக தான் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆளுநர் மாளிகை சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர், இது மட்டுமல்லாமல் இந்த தாக்குதல் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே காவல்துறைய ஆணையர் சங்கர் ஜிவால் ஆளுநரை சந்தித்து எனவும் இந்த தாக்குதல் விவகாரம் குறித்து பேசிவிட்டார் எனவும் அமைச்சர் பொன்முடி இன்று ஆளுநரை அவரது மாளிகையில் சந்திக்கவில்லை என தகவல்களை தெரிவிக்கின்றன.
மேலும் தேசிய புலனாய்வு முகமை இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பது வேறு திமுக அரசுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணைக்காக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விரைவில் தமிழகத்தில் இறங்குவார்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறுகையில் 'இந்த விவகாரம் திமுக அரசுக்கு கண்டிப்பாக இடைஞ்சலை ஏற்படுத்தும், தேவையில்லாமல் இவர்கள் சட்டம் ஒழுங்கை கவனிக்க தவறி விட்டார்கள் அதற்கான வினையை அனுபவிப்பார்கள்' எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.