அதிமுகவில் இருந்தது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கைக்கு சபாநாயகர் அப்பாவுடன் மனு கொடுத்ததும் பயனளிக்காததால் சென்னைஉயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அந்த கட்சியின் பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். துணை தலைவராக ஆர்.பி உதயகுமாராக தேர்தெடுத்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர்.
அது தொடர்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை ஆர்பி. உதயகுமாருக்கு வழங்க வேண்டி சபாநாயகர் அப்பாவுவிடம் இந்து முறைக்கு மேல் மனு கொடுத்தனர். இருப்பினும் அந்த இருக்கையை மாற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக வெளிநடப்பு செய்தது.
இந்நிலையில் சென்னை நீதிமன்றத்தை நாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 66 அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. 2021ஆம் ஆண்டு மே மாதம் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள்., கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவராக தானும், துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் தேர்ந்தெடுக்கபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிர்க்கட்சி கொறடாவாகவும், எஸ்.ரவி துணை கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்ற கட்சியின் செயலாளராக அன்பழகன் மற்றும் துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியனும் தேர்ந்தெடுக்கபட்டனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகரிடம் மனு அளித்தும், நினைவூட்டல் கடிதம் கொடுத்து அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக இருக்கையை மாற்ற சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டி அந்த மனுவில் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுகவில் ஏற்பட்ட பிரச்னை ஓய்ந்தபாடு இல்லை. இன்னும் அதிமுகவின் சின்னம் யாருக்கென்ற வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருவரும் மாரி மாரி கோர்டில் வழக்கு தொடர்ந்து தங்களது பக்கத்தில் உள்ள நியாயத்தை முன் நிறுத்தி வருகின்றனர்.
இது தொடக்கம் மட்டுமே தவிர இன்னும் நிறைய பிரச்சனைகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் இவையெல்லாம், பாஜக கூட்டணியில் அதிமுக இருந்திருந்தால் எப்போதே முடிவுக்கு வந்திருக்கும். எடப்பாடி கூட்டணியில் இருந்து வெளியேறியது நல்லதாக நினைத்து கொண்டு இருக்கிறார். தேர்தல் நெருங்கும்போது தான் அவருக்கு தெரியவரும் பின் விளைவுகள் என்னவென்று என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.