24 special

கரூர் பத்து தலைக்கு குறிக்கப்பட்ட நாள்...! அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சது..!

senthilbalaji
senthilbalaji

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி எட்டு முறை ஜாமின் நிராகரிக்கப்பட்டு தற்பொழுது சிறையில் இருந்து எப்பொழுது வெளியே செல்வோம் என்கின்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருப்பதனால் வெளியில் சென்றால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாகவும், அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் இன்னும் தலைமறைவாக இருப்பதனால் எப்படி இவருக்கு ஜாமீன் கொடுக்க முடியும் என வாதிட்டதன் காரணமாக செந்தில் பாலாஜிக்கு இனி ஜாமீன் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை அதுவும் குறிப்பாக அவர் அமைச்சர் பதவியில் இருக்கும் வரை ஜாமீன் என்பதை நினைத்து பார்க்க முடியாது என சட்ட வல்லுனர்கள் கூறி வந்தனர். 


இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி இளைத்து விட்டார், மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார் என சிறைத்துறை டிஐஜி கனகராஜ் கூறியதும் வேறு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இது குறித்து சிறைத்துறை டிஐஜி கூறும்போது பொழுது, 'செந்தில்பாலாஜி மிகவும் மன அழுத்தத்தில் உள்ளார்' என செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக கூறினார். மேலும் செந்தில் பாலாஜி ஜாமினை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என புழல் வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூட்டப்படும் என்கின்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது கூட்டத்திற்கு அனைத்து அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது, அந்த அழைப்பில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது அதற்காக கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இப்படி உடனடியாக அமைச்சரவை கூட்டம் கூறப்படுவது குறித்து அரசியல் விமர்சகர்களிடம் கேட்ட பொழுது தற்பொழுது 'தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது, செந்தில் பாலாஜி விவகாரத்தில் செந்தில் பாலாஜியை வெளியே எடுத்தால் தான் திமுகவிற்கு இருக்கக்கூடிய சில அவப்பெயர்களை சமாளிக்க முடியும். செந்தில் பாலாஜியை சிறையில் வைத்திருந்தால் மக்கள் அவரை குற்றவாளி  என்றுதான் பார்ப்பார்கள், அதனால் செந்தில் பாலாஜியை வெளியே எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அமைச்சர் பதவியில் இருந்து அவரை எடுத்தால் மட்டுமே தான் வெளியில் எடுக்க முடியும் எனவே இந்த அமைச்சரவை கூட்டம் வெளியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக ஆலோசனை என கூறப்பட்டாலும் கண்டிப்பாக இது அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தின் முடிவு எடுப்பதற்காகவே தான். மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் செந்தில் பாலாஜியை நீக்கி அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை' என்ற கருத்தை முன் வைத்தனர். 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமைச்சரவை கூட்டம் கூடுவது செந்தில் பாலாஜி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் அமலாக்கத்துறை அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கினாலும் ஜாமீனுக்கு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி ஏன் தம்பி சரண்டராகவில்லை என்ற கருத்தை முன்வைக்கும் எனக் கூறுகின்றனர் சில முக்கிய புள்ளிகள். 

ஏனெனில் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி  நீக்கப்பட்டாலும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை ஜாமினில் விட தயாராக இல்லை என்பது போல் தெரிகிறது எப்படியும் செந்தில் பாலாஜியை கைது செய்ததிலிருந்து அதாவது ஜூன் மாதத்தில் இருந்து 2024 ஜூன் மாதம் வரை உள்ளே வைத்தால் தான் சரியாக இருக்கும் என அமலாக்கத்துறை நினைப்பதாகவும் சில தகவல்களை கசிய விடுகின்றனர் என்பதை குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் அமைச்சர் பதவி மறுபுறம் தம்பியின் தலைமறைவு இரண்டும் சேர்ந்து செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டு விடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.