கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், இனத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கும் அதற்கு துணை போகின்ற திமுகவிற்கும் மக்கள் இன்னும் வாய்ப்பளித்து வருகிறார்கள்! அரசு விழாவில் இன்பநிதிக்கு என்ன வேலை தமிழகம் என்பது இந்த குடும்பத்திற்கு பட்டா எழுதி கொடுக்கப்பட்டுள்ளதா? என்று கொந்தளித்து பேசினார்.
இந்த நிலையில் சிறுபான்மை மக்களை திட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவதற்கு மதம் காரணமாக இருந்தது பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்ததற்கு மொழி காரணமாக அமைந்தது. இதிலிருந்தே மதத்தை விட சாதியை விட எல்லா அடையாளங்களை விட மொழி இனம் தான் முக்கியம் அப்படி இதனை ஒத்துக் கொள்ளும் பொழுது கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் தமிழன் தானே! பெரும்பான்மை தேசியத்தின் மகன், ஆதலால் வந்தவன் போனவன் எல்லாம் தன்னை சிறுபான்மையினர் என்று கூறினால் செருப்பைக் கழட்டி அழித்து விடுவேன் என்று ஆவேசமாக பேசியிருந்தார். சீமானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் தற்போது மறுபடியும் சிறுபான்மையினரை அவமதிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் ஒருவரை ஒருமையில் பேசினார் என வேறு சர்ச்சை எழுந்துள்ளது.
அதாவது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், என்னுடன் இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம் என்று கூறுபவர்களும் திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சேர்கிறார்கள் என தெரிவித்தார். உடனே செய்தியாளர் ஒருவர் ஒரு தொகுதிக்கு மூன்று ஆயிரம் வாக்குகள் மட்டும் வாங்கினால் போதுமா சார் என கேள்வி எழுப்ப ஒரு தொகுதிக்கு 25 ஆயிரம் ஓட்டுகள் 35 ஆயிரம் ஓட்டுகள் கூட வாங்கி இருக்கிறேன் நீங்கள் தூக்கில் தொங்குவீர்களா அல்லது விஷம் குடிக்கிறீர்களா? 3 ஆயிரம் ஓட்டுகள் எந்த தொகுதியில் வாங்கினேன் என்று கூறுங்கள் நான் தீ குளிக்கிறேன் என்று கோபமாக பேசி எந்த இதழில் வேலை செய்கிறீர்கள் என கேட்டுள்ளார், அதற்கு அந்த செய்தியாளரும் தான் பணிபுரிந்த இதழின் பெயரை சொல்ல இந்த பத்திரிகை அவ்வளவு கேவலமாக போய்விட்டதா என்று கூறி உங்கள் பெயர் என்ன என்று கேட்டுள்ளார்.
அதற்கு கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் சிராஜுதீன் என்று அவர் கூறியவுடன் அப்போ நீ பேசுவாய் என ஒருமையில் பதில் அளித்துள்ளார். இதனால் பத்திரிக்கையாளருக்கும் சீமானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மறுபடியும் அந்த பத்திரிகையாளரை சீமான் கோமாவில் இருக்கிறாய் என்று நினைக்கிறேன் உன் பேரு சிராஜுதீனா? என்றும் கூறியுள்ளார். இப்படி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக சிறுபான்மையினரை பற்றியும் சிறுபான்மையினருக்கு மரியாதை கொடுக்காமலும் பேசி வருகிறார் எனவும் இணையதளங்களில் விமர்சனங்களாக எழுந்துள்ளது. அதாவது ஒருபுறம் சிறுபான்மையினர் ஆயுள் கைதிகளை விமர்சிக்க வேண்டும் என்று போராடுகிறார் ஆனால் பொதுவெளியில் சிறுபான்மையினர் என்றால் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசுவது சிறுபான்மையினர் என்று கூறி வந்தால் அவனை செருப்பால் அடிப்பேன் என்று பேசிவது, சிராஜுதீனனா நீ அப்படித்தான் பேசுவ!! என கூறுவதெல்லாம் சீமான் மீது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மேலும் இது குறித்து அரசியல் விமர்சகர்களிடம் கேட்டபோது, சீமான் அந்த சிறுபான்மையினர் எனக்கூறி அரசியல் செய்யும் முறையை எதிர்க்கிறார் என கருத்து தெரிவித்தனர். சீமானை விமர்சிப்பவர்களோ இது சீமானுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் எனக்கூறி விமர்சிப்பதும் குறிப்பிடத்தக்கது...