24 special

ஜாலி ட்ரிப்பில் சபரீசன்! ரஷ்யாவ மோடில் கனிமொழி! சின்னவரை கை கழுவிய குடும்பம்! ஆட்டம் கண்டது கோபாலபுரம்! மொத்தமும் முடிந்தது!


சபரீசன் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதிக்கு எதிராக ஆரம்பித்தில் இருந்தே திமுகவில் பலரும் போர்க்கொடி தூக்கினார்கள் ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உதயநிதி துணைமுதல்வரானார். மேடை மற்றும் செய்தியாளர்கள் பேட்டியில் நக்கலாக பேசுவது அரசியல்வாதிகளை ஒருமையில் பேசுவது இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சுக்களை பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதை புண்சிரிப்போடு ரசித்து வந்தார் முதல்வர் ஸ்டாலின். 



கருணாநிதி, ஸ்டாலின் அடுத்து உதயநிதி மூன்றாம் தலைமுறை தலைவராகப் பார்க்கப்படுகிறார். ஆனால், உண்மையில் உதயநிதி என்ன சாதித்தார் என துணை முதல்வர் பதவியை வழங்க முடிவு செய்தது என்னும் கேள்வி எழுந்தது குறிப்பாக சபரீசான் இந்த கேள்வியை முன்வைத்தார் ஏனென்றால் சபரீசன் மு.க.ஸ்டாலினுக்கு யுக்திகளை வகுத்து அளிப்பவராகவும் ஆலோசனை வழங்குபவராகவும் மாநிலத்தின் மிக அதிகாரமிக்க முகங்களில் ஒருவராகவும் இருந்து வந்தார்.ஆனால் உதயநிதியை தூக்கி வைத்து கொண்டாடியது திமுக தலைமை. 

  

மேலும் உதயநிதி புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற நிகழ்வில் ஸ்டாலின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர் ஆனால் கனிமொழி, சபரீசன் ஸ்டாலின் மகள் செந்தாமரை ஆகியோர் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார்கள். குறிப்பாக கனிமொழி சென்னையில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துணை முதல்வராக அறிவித்த பின் உதயநிதி ஸ்டாலின் சபரீசனிடம் சந்திக்க டைம் கேட்டும் கொடுக்கவில்லை.என்பது அனைவருக்கும் தெரிந்ததேமேலும் செந்தில் பாலாஜி போன்ற முக்கிய அமைச்சர்கள் அனைவரும் சபரி பின் வரிசைகட்டி நின்றார்கள். . 

 

மேலும் திமுகவின் ஒடடுமொத்த அரசியலும் உதயநிதி பக்கம் திரும்பியது. சபரீசன் கலாநிதிமாறன் போல் மாறிவிட்டார் பிசினஸ் பக்கம் சென்றுவிட்டார் மேலும்  அரசியில் அவரின் தலையீடு குறைய ஆரம்பித்தது  இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஒரு விண்வெளி ஆய்வு மையத்தைத் தொடங்கியுள்ளர். விண்வெளி ஆர்வலராகர் இருக்கும் அவர் வானம் என்ற விண்வெளி தொழில் நுட்ப நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழக விண்வெளி தொழில் கொள்கைக்கு  அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் தமிழகத்துக்கு வரும் 5 ஆண்டில் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும். என்று தமிழக அரசு தெரிவித்து சபரீசனை  சமாதானம் செய்தார்கள் . 


இதை விரும்பாத சின்னவர் தனது ரசிகர் மன்ற தலைவரான அன்பில் மகேஷை வைத்து சினிமா துறையை கட்டுக்குள் கொண்டுவந்தார். அவர் தான் அந்த ஆகாஷ் பாஸ்கரன். அடுத்து செந்தில்பாலாஜியை கைக்கு கொண்டுவந்தார் சின்னவர். அதனை தொடர்ந்து டாஸ்மாக் விவாகரத்திற்கு  ரத்தீஷை களமிறக்கியுள்ளார் உதய். செந்தி பாலாஜி மதுவிலக்கு அமைச்சராக இருந்தபோது கோபாலபுரம், சித்தரஞ்சன் சாலைகளுக்கு சீராக ஸ்வீட் பாக்ஸ் சென்றது. அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டவர் மருமகன் தரப்பு . அதனால் தான் செந்தில் பாலாஜி ஜாமீன் விஷயத்தில் டெல்லிக்கு நடையாய் நடந்து வந்தார் மருமகன் ஆனால் அதை எல்லாம் மறந்த திமுக தலைமை சின்னவரை முன்னிலைப்படுத்துவதில் தீவிரம் காட்டியது. இதை விரும்பாத மருமகன் தரப்பு ஒட்டுமொத்தமாக ஒதுக்கியுள்ளது. 


இந்தநிலையில் தான்  தற்போது அமலாக்கத்துறை  ரைடு கோபாலபுர வாசலுக்கு வந்துள்ளது. இதனை மருமகன் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லையாம். யார் என்ன ஆனால் எனக்கென்ன என்ற  ரீதியில் ஹாயாக ஐரோப்பாவில் சம்மரை கழித்து வருகிறாராம். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று விவரிக்கும் குழுவில் கனிமொழி பிஸியாகிவிட்டார். உதயநிதியை அமலாக்கத்துறை சுற்றி வளைந்திருக்கும் நிலையில் கனிமொழி, சபரீசன் உலகம் சுற்றி வருகிறார்கள் என திமுகவினர் புலம்பி வருகிறார்கள். அனைவரும் கைவிட்ட காரணத்தால் முதல்வர் ஸ்டாலினே டெல்லிக்கு விரைகிறார். என்ற செய்திகள் வெளிவந்துள்ளது