
தமிழக அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு சனாதான ஒழிப்பை கையில் எடுக்க ஒழிக்க உள்ளதாக முழக்கமிட்டார். இது தமிழக மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல எதிர்ப்புகளை பெற்றது, அமைச்சர் உதயநிதிக்கு எதிரான கருத்துகளும் கண்டனங்களும் ஆங்காங்கே முன்வைக்கப்பட்டது அமைச்சர் உதயநிதி எதிரான வழக்குகளும் பதியப்பட்டது சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்! இது எங்களது மனதை புண்படுத்துகிறது என்று இந்து சமயத்தை சேர்ந்த சிலரும் இந்து அமைப்புகளை சேர்ந்த சிலரும் உதயநிதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். மேலும் சமாதானத்தை குறித்து அமைச்சரின் உதயநிதி பேசியது INDI கூட்டணியிலும் அதிக எதிர்ப்பை பெற்றது இதனால் திமுக கூட்டணியில் நிலைத்து நிற்கும் தன்மையை இழந்தது.
இதற்கு பிறகு சனாதன தர்மத்தை இனி நாம் எளிதாக விடக்கூடாது அதனை ஒவ்வொரு வகையிலும் வெளிப்படுத்தி நாம் சனாதனத்தை கட்டி காக்க வேண்டும் என்று இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் சனாதனத்தை குறிக்கும் போதனைகளையும் வசனங்களையும் பாடல்களையும் அதிக அளவில் வெளி கொண்டு வருகின்றனர். இதனால் சமீப காலமாக சமூக வலைதளத்தில் சனாதனம் குறித்த கருத்துக்கள் போதனைகள் பாடல்கள் கதைகள் அதற்கான விளக்கங்கள் அனைத்தும் அதிகமாக பதிவிட பட்டு பகிரப்படுகிறது. அதில் சமீபத்தில் கூட பெருமாள் கோவிலில் பண்டிதர் ஒருவர் பெருமாளை ஏன் நேரடியாக பார்க்கக்கூடாது முதலில் கண்ணாடியில் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு ஏன் பெருமாளை பார்க்க சொல்கிறார்கள் என்பதை சிறு குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து பெருமாளின் பாடலையும் பாடி அதற்கான விளக்கத்தையும் கூறி புரிய வைத்தார்.
இதேபோன்று சிறு வயது ஐயராக பயின்று வரும் சிறுவன் சிவனின் விபூதியில் உள்ள மகிமையை திருமூலர் எழுதிய திருமந்திரத்தின் பாடலை பாடி விளக்கியது அதிக அளவில் வைரலானது. இதனைத் தவிர இந்து சமயத்தின் பாடல்களும் வைரவாக சமூக வலைதளங்களில் வெளி வருகிறது அது மட்டும் இன்றி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த மழை திருச்செந்தூர் அதிக பாதிப்பை சந்தேகத்தாலும் திருச்செந்தூரில் முருகன் கடலோரத்தில் வீற்றிருந்தாலும் எந்த ஒரு பாதிப்பையும் திருச்செந்தூர் கோவிலும் கோவிலுக்குள் இருந்த பக்தர்களும் சந்திக்கவில்லை என்பது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவிலிருந்து இடம்பெருந்து வெளிநாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளிகள் சனாதனத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
மேலும் வெளிநாட்டைச் சேர்ந்த இந்தியர்களும் இந்து மதத்தை பின்பற்றி கடவுள்களை வழிபடும் வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தது, அதே போன்று தற்பொழுது வெளிநாட்டில் வளரக்கூடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகள் சனாதனத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அதனை பின்பற்ற வேண்டும் என்று தங்கள் குழந்தைக்குகளுக்கு போதித்து வருகின்றனர். அந்த வகையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த இரு பெண்கள் கீதையை பாடலாக பாடி அசத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் எந்த ஒரு திக்கலும். திணறலும் இன்றி ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண்கள் ராமரின் கீதையை பாடியது இணையங்களில் அதிகமாக பகிரப்படுகிறது. அதோடு எந்த மாநிலத்தைச் சேர்ந்த வராலும் எந்த அதிகாரத்தில் இருந்தாலும் சனாதனத்தை அவரால் இனி சீண்டி கூட பார்க்க முடியாது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.