சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனத்தை தமிழ்நாட்டில் சந்தைப்படுத்துதல் மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கக்கூடும். இந்த நிகழ்ச்சியில் பிரபல யூடூப் சேனல் VILLAGE COOKING CHANNEL குழுவினர், அவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து சமையல் சொதப்பல்களை பகிர்ந்தது சுவார்ஷயமாக அமைந்தது.
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ஐ நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் முதல்வர் நேற்று தொடங்கி பல்வேறு நிறுவனங்கள் தனது முதலீட்டை விரிவு படுத்து வருகின்றனர். அந்த வகையில் உலக முதலீட்டாளர் மாநாட்டில், கிரியேட்டிவ் எக்கானமி பற்றிய கலந்துரையாடலில் சமையல் கலை விடீயோக்கள் மூலம் பிரபலமாகியுள்ள வில்லேஜ் குக்கிங் சேனல் (Village Cooking channel) யூடியூப் சேனல் குழுவினர் கலந்து கொண்டனர். 2.33 கோடி சப்ஸ்கிரைபர்களை கொண்ட இந்த சேனல், சமையல் கலை யூடியூப் பிரியர்களின் ஏகோபித்த வரவேற்புடன் இயங்கி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு குக் கிராமத்தில் தங்களது வாழ்க்கையயை யூடுயூப் மூலம் தொடங்கி மக்கள் இடத்தில் தற்போது வரவேற்பு பெற்றுள்ளனர். இவர்கள் குழு தான் சமையலில் முதலிடத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் இவர்களது திறமையை கண்டு அந்த படத்தில் இவர்களுக்கு என்று ஒரு காட்சியை வடிவமைத்தார். அதன் பின் மேடையில் ஏறியிருப்பது சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் தான். 6 பேர் கொண்ட குழுவாக சமையல் செய்து வரும் இவர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்டனர். அப்போது சுப்பிரமணியன், தாங்கள் சொதப்பிய தருணங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.
"ஆரம்ப நாட்களில் சமையல் செய்யும்போது நிறையவே சொதப்பி இருக்கிறது. ஒருமுறை அரேபியன் பிரியாணி செய்யும்போது 2 ஆடுகளை மசாலா தடவி குழியில் இறக்கி, அதன் மேல் தகரம் வைத்து, அதன் மேல் ஒரு வண்டி விறகுகளை கொட்டி தீ மூட்டி வேக வைத்தோம். பொதுவாகவே ஆட்டுக்கறி வேக 1 மணி நேரம் ஆகும், இதில் தீ மேலே போகிறது என்பதால் 2 மணி நேரம் எரிய விடுவோம் என எரிய வைத்தோம். அதன் பிறகு நெருப்பு அணைந்ததும் தகரத்தை திறந்து பார்த்தால் ஒன்றுமே தெரியவில்லை. ஆட்டை காணோம். 2 ஆடுகள் இருந்த தடம் மட்டும்தான் இருந்தது. 2 ஆடுகளும் அதிகமாக தீயை எரித்ததால் பொசுங்கி சாம்பலாகிவிட்டன. எலும்பு கூட மிஞ்சவில்லை. அதில் இருந்து கற்றுக்கொண்டு, மீண்டும் வெற்றிகரமாக அதே வீடியோவை போட்ட்டோம். ஒவ்வொரு முறையும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம்" என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, நங்கள் ஒரு வீடியோ எடுப்பதற்கும் அதில் சமையல் செய்வதற்கும் செலவு 3 லட்சம் வரை தேவைப்படும் என அப்போது ஊரில் கிடைக்கும் இறைச்சிகளை வைத்து சமைத்தோம். இப்போது செலவும் அதிகமாகிறது ஆனால் மக்கள் பெருவாரியான ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்றும் கூறினார். விகாரம் படத்தில் இந்து குழு நடித்ததன் மூலமா படக்குழுவிடமிருந்து ஒரு ரூபாய் கூட காசு வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.