24 special

சனாதன விவகார பரிகாரம்...! திருப்பதியில் நடைபெற்ற சிறப்பு தரிசனம்...!

pm modi, congress
pm modi, congress

திமுகவின் மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது போக்குவரத்து வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு அதிகரித்த நிலையில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டும் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்கள் மேலும் அவர் தொடர்புடைய உறவினர்கள் சகோதரர்கள் நண்பர்கள் அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் என நாற்பதற்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகம் தாண்டி பிற மாநிலங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 


இதனால் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்பொழுது எட்டாவது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு அடுத்தபடியாக அமைச்சர் பொன்முடி மீது சுமத்தப்பட்டு முடிக்கப்பட்ட வழக்கு ஒன்று மறுபடியும் சந்தேகத்தின் அடிப்படையில் நீதிபதியால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது இதற்காக அமலாக்கத்துறை அமைச்சர் பொன்மொழியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை இட்டதும் சில ஆவணங்களை அதில் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் பொன்முடி மீதும் அவரது மகன் கௌதம சிகாமணி மீதும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட செய்திகளும் வெளியானது.

இதற்கு அடுத்து எம்.பியான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் இறங்கியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சமீபத்தில் மணல் குவாரிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ரெய்டு தமிழக மக்கள் மத்தியில் கவனம் பெற்றது அதுவும் முறைகேடாக மணல் கடத்தப்பட்ட சம்பவமும் கருப்பு பணமாக பலவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியது திடுக்கிடும் சம்பவமாக செய்திகளில் வெளியானது. இப்படி தமிழகத்தில் தொடர்ச்சியாக முக்கிய செய்தியாக இடம் பெற்ற அனைத்து செய்திகளும் தமிழகத்தில் ஆளும் கட்சியின் அமைச்சர் மற்றும் எம்பிகளே! இந்த சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடப்பது அறிவாலயத்திற்கு பெரும் தலைவலியையும் இடி மேல் இடியை இறக்கியது போன்றும் அமைந்துள்ளது.

இது அனைத்தையும் விட அமைச்சர் உதயநிதி சனாதனத்தை குறித்து பேசிய கருத்துக்கள் வேறு இந்தியா முழுவதும் பெறும் சர்ச்சை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் I.N.D.I.A கூட்டணியில் இருந்து திமுகவை விலக்க வேண்டும் என்பது போன்ற வரைக்கும் பேச்சுவார்த்தை எழுந்ததாக வேறு தகவல்கள் உலா வந்தது திமுகவினருக்கு குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஏனெனில் தற்போதுதான் அமைச்சர் உதயநிதி அரசியலில் வளர்ந்து வருகிறார் இப்படி முதல் முறை அமைச்சராக வந்தவுடனே கூட்டணியை முறித்துக்கொள்ளும் அளவிற்கு கட்சியை கொண்டு வந்து நிறுத்திவிட்டார் என பேச்சுக்கள் எழுந்தால் அது அரசியலில் உதயநிதியின் எதிர்காலத்திற்கு வினையாக முடியும் என முதல்வர் குடும்பத்தினர் கவலையில் இருந்ததாக வேறு சில தகவல்கள் கசிந்தன. 

இந்த நிலையில் கடந்த வாரத்தில் தமிழக முதல்வரின் மகள் சீர்காழியில் உள்ள சக்தி வாய்ந்த பைரவரை தரிசனம் செய்தார். அவரைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் மனைவி திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கிறார். அங்கு சிறப்பு பூஜைகள் வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதுவும் தனது குடும்ப நபர்களோடு துர்கா ஸ்டாலின் திருப்பதியில் சிறப்பு பூஜை முடித்துவிட்டு வெளியேறும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இவை அனைத்திற்கும் பின்னணியில் திமுக மீது நடத்தப்பட்டு வரும் அமலாக்கத்துறை ரெய்டு நடவடிக்கைகள் மற்றும் உதயநிதி சனாதன விவகாரத்தில் தலையிட்டது தான்காரணம் எனக் கருதி முதல்வர் குடும்பம் பரிகாரத்தில் ஈடுபட்டதாக வேறு சில விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் திமுக தரப்பில் இது குறித்து கேட்ட பொழுது அது காரணம் அல்ல, இது புரட்டாசி மாதம் என்பதால் தான் முதல்வர் மனைவி திருப்பதி பெருமாளை தரிசிக்க கோவிலுக்கு சென்றதாக கூறுகின்றனர்.