24 special

பெரியப்பா கட்சியை காப்பாத்துங்க ...! மு.க.அழகிரி திடீர் இணைப்பு பரபர பின்னணி..!

Mk alagiri, udhayanithi
Mk alagiri, udhayanithi

ஆறு வருட சந்திப்பிற்கு பிறகு முதலமைச்சர்  மு க    ஸ்டாலின் மற்றும் அவரது அண்ணன் மு க அழகிரியும்  நேரில் சந்தித்துக் கொண்டனர் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவலாக வருகிறது. மேலும் முக அழகிரி தென் மாவட்ட அமைப்பு செயலாளர் ஆக திமுகவில்  இருந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தென் மாவட்டங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலினும் மு.க அழகிரியும் நேரடியாக சந்தித்துக்கொண்டது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


சகோதரரும் முதல்வருமான மு க ஸ்டாலினை  முக அழகிரி நேரில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேலும் அவர் திமுகவில் மீண்டும்  இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. 2014ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மு க அழகிரி இடையே மனக்கசப்பு ஏற்பட்டு  திமுகவிலிருந்து முக அழகிரி வெளியேற்றப்பட்டதாக திமுகவினரே கூறிவந்தனர். பலமுறை அவரை கட்சியில் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ள பட்டாலும் கருணாநிதி முடிவே கடைசி முடிவாக கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு கருணாநிதியின் இறப்பின் போது தான் மு க ஸ்டாலின் மற்றும் மு க அழகிரி நேரில் சந்தித்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்குப் பின் இப்பொழுதுதான் கோபாலபுரத்தில் உள்ள தாயார் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டு நலம் விசாரித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதன் பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக சில அறிந்தவர்கள் கூறுகின்றனர். விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில்  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்தி வைப்பதற்காக சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் அழைக்கப்பட்ட நிலையில்  மு க அழகிரி அவரை வரவேற்றதும் மேலும் முக அழகிரியின் காலில் விழுந்து உதயநிதி ஸ்டாலின் ஆசிர்வாதம் வாங்கியதும் பலபேர் இடையே சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் முக அழகிரி மறுபடியும் திமுகவிற்கு திரும்ப வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இதற்கிடையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி நேரில் சந்தித்துக் கொண்டு சுமார் ஒரு மணி நேரம் பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது குறித்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது இது வழக்கமான சந்திப்புதான் எனக்கூறி மழுப்பியதும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் மு க அழகிரி சமாதானம் ஆகிவிட்டார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு எப்போது சண்டை போட்டார்கள் சமாதானம் ஆவதற்கு எனக்கூறியதும் இதற்க்கு பின்னால் அரசியல் கணக்குகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டது. மேலும் உதயநிதி ஸ்டாலின் தான் மு க அழகிரிக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுத்துள்ளார் என்றும், மேலும் தென் மாவட்டங்களை வலுவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டம் என்றும் பேசப்பட்டு வருகிறது. 

செந்தில் பாலாஜியின் வழக்கில் திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் அதனை சரி கட்ட முக அழகிரி தான் சரியான ஆள் எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முடிவெடுத்து அழகிரியை அழைத்திருப்பதாக கூறப்படுகிறது, இதன் பின்னணியில் தற்போது செந்தில்பாலாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது திமுகவில் உள்ள மூத்த தலைவர்களுக்கு பிடிக்காத காரணத்தினால் விரைவில் இது உட்கட்சி மோதலாக வெடிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுவதாகவும் அதற்குள் சரிக்கட்ட அண்ணன் மு.க அழகிரி தான் சரியான ஆள் என கணக்கிட்டு அதற்கத்தான் இந்த இணைப்பு விழா எனவும் சில அரசியல் விமர்சகர்கள் கிசுகிசுகின்றனர்.