மாணவ, மாணவிகளின் சேர்க்கையை பொறுத்தவரை, பள்ளியில் கிடைக்கும் வசதிகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. ஒவ்வொரு பள்ளியும் தமது பகுதியிலுள்ள இன்னொரு பள்ளிகளைப் போட்டியாக நினைத்து, அவர்களைவிட இந்த விஷயத்தில் நாங்கள் அதிக வசதிகள் கொண்டுள்ளோம் என முன்னிறுத்துவதே இதற்கு சாட்சி. அந்த வகையில் தலைநகர் சென்னையில் உள்ள அரசு பள்ளியில் உள்ள மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தது பர்பப்ரபை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளை பொறுத்தவரை ஸ்மார்ட் வகுப்பறை, பாதுகாப்பான குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதில் கல்வித் துறை உறுதியாக உள்ளது. "நம்ப பள்ளி நம்ம ஊரு" திட்டத்தில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மூலம் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. ஆனால், அரசு தரப்பில் இருந்து எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஒரு சில பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படையான கழிவறை வசதி போதுமான அளவு இல்லாத நிலை இன்னும் இருந்து வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதி இல்லாததால் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அந்த வகையில் சென்னை மதுரவாயல் தொகுதி போரூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை என்று சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றனர். மாணவிகளுக்கு போதிய கழிவறை இல்லாததால் இருக்கும் கழிவறையும் வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து கொடுப்பதாக கூறி மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. அதிக மாணவர்கள் கொண்ட பள்ளியில் சிறுநீர் கழிப்பதற்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். ஆனால் ஒன்று அல்லது 2 கழிவறைகள் மட்டுமே இருப்பதால் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் கழிவறைகள் சுத்தம் இல்லாமல், முறையாக பராமரிக்காமல் இருப்பதால் மாணவர்கள் உள்ளே செல்லவே தயங்குகிறார்கள். சென்னையில் மாணவிகள் போராட்டம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக தமிழத்தில் உள்ள அணைத்து அரசு பள்ளிகளிலும் இது போன்ற பிரச்சனை இருப்பதாகவும் வெளியில் சொன்னால் மாணவர்களுக்கு மார்க் குறைத்து விடுவதாக ஆசிரியர்கள் கூறுவதாக மாணவர்களே தெரிவிக்கின்றனர். மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மாதம் இருமுறை பள்ளிகளை ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே அரசு பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால்தான் மாணவர்கள் நன்றாக படிக்க முடியும். குடிநீர், கழிவறை வசதி மிக மிக முக்கியமானது.
அவற்றை தேவைக்கேற்ப கட்ட வேண்டும். முறையாக பராமரிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். கடந்த முறை அரசு பள்ளியில் உள்ளக்குடி நீர் தொட்டியில் காக்கா எச்சம் போட்டுவிட்டதாக கூறப்பட்டது. முறையாக பராமரிப்பு இல்லாததால் குடிநீர் சுத்தம் இல்லாத குடிநீர் வழங்கப்படுவதாக சேலம் அருகே உள்ள அரசு பல்லாயில் போராட்டம் செய்தனர். அரசு தரப்போ அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற்கு திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை மூன்று வருடம் ஆகிய நிலையில் மக்களிடம் எந்த வித திட்டத்திலும் நல்ல பெயர் பெற்றதாக தெரியவில்லை.