24 special

எதிர் முகாமில் ஓட்டையை போட்ட மோடி சாணக்யத்தனம்....

pm modi
pm modi

இந்தியாவில் மிக உயரிய விருதாக கருதப்படுகின்ற பாரத ரத்னா விருது தேசத்திற்காக சேவையாற்றுபவர்களை பாராட்டும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு மற்றும் பொது சேவை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக பங்காற்றியவர்களை தேர்ந்தெடுத்து வழங்கப்படுகிறது இந்த விருது வழங்கப்படுவது சில குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கலாம் என்றும் இதற்கான பரிந்துரையை பிரதமர் குடியரசு தலைவருக்கு செய்வார். அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பட்டியல்கள் சமீபத்தில் வெளியானது அதில் பிவி நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், எம் எஸ் சுவாமிநாதன், அத்வானி மற்றும் கற்பூரி தாகூர். இவர்களில் எம் எஸ் சுவாமிநாதன் என்பவர் வேளாண் உற்பத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். 1960 இல் ஏற்பட்ட பசுமைப் புரட்சிக்கு தலைமையும் வகித்தவர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விருது வழங்கப்பட்டிருப்பது தமிழக முழுவதும் கவனம் பெற்றுள்ளது.


மேலும் பாரத ரத்னா விருது பட்டியலில் இடம் பெற்று இருக்கும் பிவி நரசிம்மராவ் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் நமது முன்னாள் பிரதமர் திரு.பி.வி.நரசிம்ம ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டிருந்தார். இது காங்கிரசை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, ஏனென்றால்  பி வி நரசிம்ம ராவ் காங்கிரஸால் தொடர்ந்து புறக்கணிப்பை சந்தித்து வந்தவர் ஆனால் அவருக்கு தற்பொழுது மத்திய அரசு விருதை அறிவித்துள்ளதும் காங்கிரசின் கடுப்பை ஏற்றி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தற்போதைய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கே ராஜ்ய சபாவில் ஏற்கனவே முன்னுருக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் பாஜக தற்போது 400 தொகுதிகளையும் கேட்கிறது எப்படியும் எடுத்து விடுவார்கள் என்ற வகையில் பேசியது வேறு காங்கிரஸ் தன் பின்னடைவை ஒத்துக் கொள்வது போன்று உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் இது குறித்து பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். 

அதாவது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்து வந்த நரசிம்மரா சுதந்திர இந்தியாவின் தென்னிந்தியாவை சேர்ந்த முதல் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பெரும் ஆளுமையைக் கொண்ட இவர் 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் மாரடைப்பால் உயிரிழந்த பொழுது அவருடைய பூத உடலை மத்திய அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்க கூடாது ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் விடுமுறைக்குச் செல்ல வேண்டும் என்பதால்  சோனியா காந்தி அனுமதிக்க வில்லை மரியாதையும் செலுத்தவில்லை! மேலும் பல இன்னல்களை நரசிம்மராவிற்கு காங்கிரஸ் கொடுத்துள்ளது என சோனியா காந்தியின் பின்னணியில் பல செய்திகள் வெளிவந்துள்ளதாக பிரபல பத்திரிக்கையாளரான டெல்லி ராஜகோபாலன் தனியார் youtube சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் அதோடு இப்படி நரசிம்மராவே மொத்தமாக எதிர்த்து வந்த சோனியா காந்திக்கு மத்திய அரசு நரசிம்மராவிற்கு பாரத ரத்னா விருதை வழங்கி இருப்பது கரியை பூசி உள்ளதாக விமர்சித்துள்ளார். அதுமட்டுமின்றி பிரதமர் இருக்கும் நாடாளுமன்றத்திலே பாஜக 400 தொகுதிகளையும் இந்த முறை எடுத்து விடும் என்று மல்லிகார்ஜூன கார்கே கூறியதற்கு ராகுல் காந்தி அவரை கடுமையாக திட்டி உள்ளார் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே தொடர்ச்சியாக பின்னடைவுகளை சந்தித்து வருகிறோம் 5 மாநிலங்களின் தேர்தலும் நமக்கு பெரும் தோல்வியை கொடுத்துள்ளது தற்போது IND கூட்டணியும் பிளவு பட்டு வருகிறது இந்த நேரத்தில் மல்லி கார்ஜூன கார்கே பாஜகவிற்கு சாதகமாக பேசி இருப்பதற்கு ராகுல் கடிந்து கொண்டதும் காங்கிரசிற்குள்ளும் சில சர்ச்சைகள் வெடிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.