மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் டெல்லியில் சில பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் குடோனில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் கிலோ கணக்கிலான போதைப் பொருள்களையும் போதைப்பொருள் தயாரிப்பதற்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் வேதிப்பொருளையும் அதிகாரிகள் கைப்பற்றினார். மேலும் இந்த கடத்தலில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அதிகாரிகளிடம் பிடிபட்டனர் இதற்குப் பிறகு நடத்திய விசாரணையில் இந்த போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் திமுக சென்னை மேற்கு அயலக பிரிவு அணியின் தலைவராக உள்ள ஜாபர் சாதிக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது இதனை அடுத்து அவர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் இருப்பினும் இந்த கடத்தலுக்கும் திமுக நிர்வாகிக்கும் சம்பந்தம் இருப்பதால் திமுகவில் மற்ற முக்கிய நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருக்கும் என்று கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி ஜாபர் சாதிக்கின் தயாரிப்பில் இயக்குனர் அமீர் இயக்கி வந்த இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படமும் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது இருப்பினும் இயக்குனர் அமீருக்கும் ஜாபர் சாதிக்கும் நெருங்கி தொடர்பு உள்ளதாகவும் இருவரும் சேர்ந்து பல தொழில்களை ஆரம்பித்து நிறுவனங்களை நடத்தினர் என்றும் அரசியல் விமர்சகர்கள் பரபரப்பாக பல தகவல்களை முன்வைத்து வருகின்றனர்.
இதனை அடுத்து இயக்குனர் அமீர் என்னை குறித்து தவறான தகவல்கள் அதிகமாக முன்வைக்கப்படுகிறது மேலும் இது குறித்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறேன் என்ற வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். இதற்கிடையில் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் ஜாபர் சாதிக் நேரில் ஆஜராகும் படி சம்மனை ஒட்டி சென்றது மேலும் சோதனையும் மேற்கொண்டது அப்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் பல ஆவணங்களும் சிக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதுமட்டுமின்றி தற்போது டெல்லி போலீசாருக்கு ஜாபர் சாதிக்கின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்களை கைப்பற்றி உள்ளதாகவும் இதனை டெல்லி எடுத்து சென்று ஆய்வையும் மேற்கொண்டுள்ளது.
அந்த சிசிடிவி கட்சியில் பல திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் அவர்கள் அனைவரும் ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு வரும் பொழுது வெறும் கையுடன் வந்து வெளியேறும் போது கையில் சூட்கேஸ் மற்றும் ஒரு பேக்கை எடுத்துச் செல்வதும் அதிக அளவில் இடம் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து ஜாபர் சாதிக்கின் வீட்டில் வந்து சென்ற பிரமுகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் யார் யார் என்பதையும் கண்டறிந்து அவர்களுக்கும் ஜாஃபர் சாதிக்கும் என்ன தொடர்பு எந்த வகையில் எந்த வருடத்தில் இருந்து அவர்கள் பழக்கம் என்பதையும் கண்டறிந்து அவர்களுக்கும் டெல்லி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் இனிவரும் காலங்களில் சில முக்கிய திமுக பிரமுகர்களும் திரை துறையின் சில நட்சத்திரங்களும் இந்த விவகாரத்தில் மாட்ட உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே திரைத்துறையில் இயக்குனர் அமீர் மீதும் இயக்குனர் வெற்றிமாறன் இருக்கும் தொடர்பு இருப்பதாக சில கருத்துக்கள் உலா வருகிற நேரத்தில் இப்படி ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு வந்து சென்ற பிரமுகர்களின் காட்சிகள் சிசிடிவியில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதும் திரை வட்டாரத்தை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அதோடு தேர்தல் நேரத்தில் இந்த விவகாரத்தில் திமுகவின் மற்ற சில முக்கிய அமைச்சர்களின் தலை ஈடுபட்டால் நிச்சயமாக திமுகவிற்கு பெரும் பின்னடைவாக இது அமையும் என்றும் கூறப்படுகிறது.