லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்புகள் என்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதால் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் அனைத்துக் கட்சிகளால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைக் கூட்டங்களும் மும்முறமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லோக்சபா தேர்தல் நிச்சயமாக பாஜகவிற்கு பல வெற்றி கனிகளை கொடுக்கும் என்றும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அமர்வார் என்ற செய்தியும் பல ஊடகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்தது இண்டி கூட்டணி கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதனால் இண்டி கூட்டணி கட்சிகள் இடையே வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்பட்டதாகவும் அதனால் பல கட்சிகள் அந்த கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளதும் அரசியல் களத்தை பரபரப்பாகியது. மேலும் இண்டி கூட்டணியில் உள்ள முக்கிய காட்சிகளும் லோக்சபா தேர்தலை எந்த கூட்டணியும் இல்லாமல் தன்னிச்சையாக எதிர்கொள்வதாகவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் பாஜகவிற்கு சாதகமான களத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலை தேசிய அளவில் நடைபெற்றதால் திமுக மீண்டும் தன் தமிழகம் பக்கம் திரும்பி தமிழகத்தின் தன் அதிகாரத்தையும் ஆளுமையையும் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சிகள் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த முயற்சியின் திமுக தன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கவனிக்கவில்லை என்றும் மக்களின் கோரிக்கைகளையும் மறந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது 2019 முன்வைத்த வாக்குறுதிகளையே இன்னும் நிறைவேற்றாத திமுக 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான வாக்குறுதிகளை மக்களிடமே கேட்கிறதாம் இதற்கு மக்களும் முதலில் 2019-ல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் இந்த லோக்சபா தேர்தலை!! என்ற வகையில் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இப்படி மக்கள் ஒரு பக்கம் திமுகவிற்கு எதிரான கருத்துக்களையும் திமுக மீது உள்ள கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிற நிலையில் திமுக தொண்டர்களும் சில நிர்வாகிகளும் திமுக மீது அதிருத்திக் கொண்டுள்ளனர் ஏனென்றால் ஆளும் கட்சியில் தான் நாம் இருக்கிறோமா என்ற வகையிலான நடவடிக்கைகள் திமுக கட்சிக்குள் நடப்பதாகவும் பல காலமாக உழைத்து வரும் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எந்த ஒரு முன்னுரிமையும் பாராட்டுகளும் கொடுக்கப்படுவதில்லை என மூத்த நிர்வாகிகள் சீனியர் தொண்டர்களும் திமுக மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இதே காரணத்தால் சிலர் திமுகவை விட்டு விலகி வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் திமுகவில் முக்கிய அமைச்சர்களாக இருக்கும் கே என் நேரு, துறைமுருகன், டி ஆர் பாலு போன்றோர் தன் மகன்களை அரசியலில் இறக்கியதோடு மட்டுமின்றி அமைச்சர் மற்றும் எம் பி பொறுப்புகளில் தன் மகன்களை அமர வைத்து அழகு பார்க்கவும் நினைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஏராளமான முத்தரையர் சமுதாய மக்களை கொண்ட பகுதி பெரம்பலூரில் முத்தரையர் சமுதாய மக்களுக்கு திமுக சீட்டு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. மேலும் தற்பொழுது திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே திமுக கூட்டணியில் இருந்து விலகுவதால் வருகின்ற லோக்சபா தேர்தலிலாவது முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திமுக சீட்டு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பெரம்பலூர் பகுதியில் மேலோங்கி இருந்தது. ஆனால் அந்த சீட்டும் தற்பொழுது அமைச்சர் கே என் மகன் அருள்நேருவிற்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது முத்தரைய சமுதாய மக்களை கோபப்படுத்தியுள்ளது!
இதனால் இந்த முறையும் முத்தரைய சமுதாயத்திற்கு நாடாளுமன்றத்தில் சீட்டு இல்லை என்றதால் கொந்தளிப்பில் இருந்த அச் சமுதாய இளைஞர்கள், அப்பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த அமைச்சர் கே என் நேரு மற்றும் அன்பின் மகேஷ் இருவரையும் முற்றுகையிட்டு எங்களோட ஓட்டு மட்டும் உங்களுக்கு வேணும் ஆனா எங்களுக்கு சீட்டு கொடுக்க மாட்டீங்க என்ற வகையில் கோஷமிட்டு தங்கள் கொந்தளிப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் எங்களது கோபம் அனைத்தும் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றும் கூறியுள்ளனர். இந்த செய்தியால் திமுக தலைமை ஆட்டம் கண்டு இருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.