சென்னை : நீதிமன்றங்கள் சமீப காலமாக மிக தெளிவான தீர்ப்பையும் அதே நேரத்தில் முரண்பாடான அணுகுமுறையிலும் தீர்ப்பளித்து வருவதாக பொதுமக்கள் கருத்து கூறிவரும் நேரத்தில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் வசிக்கும் பிரணவ் சீனிவாசன் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனது பெற்றோர்கள் இந்திய குடியுரிமையை வேண்டாம் என துறந்துவிட்டு 1998 இல் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றனர். அப்போது மனுதாரர் பிரணவ் ஏழரை மாத கருவாக இருந்ததாகவும் 1 மார்ச் 1999ல் பிறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அங்கு பிறந்ததால் சிங்கப்பூர் குடியுரிமை கிடைத்திருக்கிறது. 1 மார்ச் 2017ல் பிரணவ்க்கு 18 வயது பூர்த்தியானதும் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் தனக்கு இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளார். 2019 ஏப்ரல் 30 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் தனது மனுவை நிராகரித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்னர் இந்த ரிட் மனு விசாரணைக்கு வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி "பெற்றோர்கள் இந்திய குடியுரிமையை துறந்துவிட்டு வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றாலும் குழந்தைக்கு இந்திய குடியுரிமை பெற முழு உரிமையும் உண்டு. கரு குறிப்பாக 1998 டிசம்பர் 19 அன்று ஏழரை மாதம் ஆன ஒரு குழந்தை நிச்சயமாக ஒரு குழந்தையின் நிலையை எட்டியுள்ளது.
எனவே இந்த நிலையில் அவர் தனது பெற்றோரின் குடியுரிமையை பெற தகுதியுள்ளவராகிறார். இதனால் மனுதாரர் குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கு அரசியல் சட்டப்பிரிவு 8(2) ன் கீழ் கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் உரிமையை யாராலும் மறுக்கமுடியாது. குடியுரிமையை பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது. இன்னும் நான்குவாரங்களுக்குள் குடியுரிமை ஆவணங்கள்