கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மேலமுரியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம்களில் உடற்கல்வி பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 16-ம் தேதி தனது கடையில் ஸ்ரீநிவாசன் இருந்தபோது 3 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
இதே பாலக்காட்டில் ஒரு நாள் முன்னர் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சுபைர், தொழுகை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறி பைக்கிலிருந்து அவர் கீழே விழுந்தார். பின்னர் காரிலிருந்து இறங்கிய மர்ம கும்பல் 45 வயதான சுபைரை அவரது தந்தையின் கண்முன்பே சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
சுபைரை கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான் என எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்புகள் குற்றம் சாட்டின. ஆனால், குற்றவாளிகள் இதுவரை பிடிபடவில்லை.
ஆனால், கொலையாளி பயன்படுத்திய காரை கண்டுபிடித்த போது மிரள வைக்கும் மற்றொரு சம்பவம் வெளிவந்தது அதில் உள்ள எண்ணை வைத்து விசாரித்ததில் அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சஞ்சித் என்பவருடைய கார் என்பது தெரியவந்தது.
Srinivasan
இந்த சஞ்சீத் கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் எப்படி என்றால் பிஎப்ஐ அமைப்பை சேர்ந்த சுபைர் எவ்வாறு கடந்த 15-ம் தேதி கார் மோதி பிறகு வெட்டி கொல்லப்பட்டாரோ அதே போன்றே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சஞ்சீத் பரிதாபமாக வெட்டி கொலை செய்யபட்டுள்ளார்.
இது போன்று கடந்த 6 மாதத்தில் மட்டும் 4 பழிக்கு பலி கொலை நடந்துள்ளன, இவ்வாறு பல இடங்களில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு போவதற்கு கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசாங்கமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர், முதல்முறையாக அரசியல் பலி வாங்கள் கொலைகள் நடந்த போதே குற்றவாளிகளை கைது செய்து நீதி கிடைத்து இருந்தால் அரசாங்கம் மீது பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நம்பிக்கை இருந்திருக்கும்.
ஆனால் அரசியல் காரணங்களுக்காக வேடிக்கை பார்த்தது பிணராயி விஜயன் அரசு, இதனால் இரண்டு தரப்பும் பலி வாங்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடவுளின் தேசம் என அழைக்கப்பட்ட கேரளா இப்போது கொலையாளிகளின் தேசம் என அழைக்கப்படுகிறது. கடைசியாக கொலைசெய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஸ்ரீனிவாசனின் மகள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் கேரளாவை சேர்ந்த மலையாளிகள் மனதை உலுக்கியுள்ளது.
இதனால் பிணராயி விஜயன் அரசிற்கு எதிராக மக்கள் மனநிலை உண்டாவதை அறிந்த அம்மாநில அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் SDPI மற்றும் PFI அமைப்பை தடை செய்வதற்கு தேவையான ஆதரவை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளதாம் இதையடுத்து இந்த அமைப்புகள் எப்போது வேண்டுமானாலும் தடை செய்ய படலாம் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த அமைப்புகள் வலுவாக இருக்கும் இடங்களான கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அரசியல் பழிவாங்கள் சம்பவங்கள் அரங்கேறலாம் என்பதால் இந்த மாநிலங்களில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் ஒரே மாநிலம் கேரளா மட்டுமே ஆனால் இங்குதான் அதிகமான அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியிலான கொலைகள் அரங்கேறுகின்றன, இதற்கு முன்னர் கம்யூனிஸ்ட் ஆண்ட மேற்கு வங்கத்தில் மிக பெரிய கலவரங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.