24 special

"டெல்லி தகவல் எதிரொலி" இரவோடு இரவாக தமிழக பாஜக தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு..!

sailendrababu
sailendrababu

மத்திய அரசு மிக பெரிய அடுத்த கட்ட சம்பவத்திற்கு தயாராகிவருவதாகவும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க இருப்பதாகவும் அவர்களின் தலைவர்கள் இயக்கத்தினர் பாகு பாடு இன்றி கைது செய்யலாம் எனவும் கூறப்படுகிறது, இந்த சூழலில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவில் பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள முக்கிய பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களை குறிவைக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.


இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் பாஜக ஆளாத மாநிலங்களின் காவல்துறையிடம் தங்களுக்கு கிடைத்த தகவலை பகிர்ந்துள்ளது மேலும் தேசிய பாஜக சார்பிலும் மாநில தலைமைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் தங்களை பாதுகாப்புடன் காத்து கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது.

இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஆடியோ மூலம் முன்னெச்சரிக்கை விடுத்தார் அதனை நமது மற்றொரு பதிப்பானா TNNEWS24 DIGITAL பக்கத்தில் வெளியிட்டு இருந்தோம். இந்த சூழலில் நேற்று இரவோடு இரவாக பல்வேறு பாஜக மாநில நிர்வாகிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் உள்ள பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதீஷ் ஆகியோரின் வீடுகள் மற்றும் நகர பாஜக அலுவலகத்திலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்து அமைப்புகளின் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை.


என குறிப்பிட்டார்இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, கேரளாவில் தொடர்ந்து வன்முறைகளும், கொலைகளும் நிகழ்ந்து வருவதன் அடிப்படையில், இங்கு போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கின்றனர் எனினும் விரைவில் கலவரத்தில் ஈடுபடும் நபர்களை மத்திய அரசு நாடு கடத்த இருப்பதாகவும் உறுதி படுத்தாத தகவல்கள் உலா வருகின்றன.

எது எப்படியோ ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடைபெற்ற கலவரங்களை தொடர்ந்து மத்திய அரசு ஏதோ ஒரு நடவடிக்கையில் ஈடுபட போகிறது என்பது மட்டும் தெளிவாகிறது.