மார்க் ஆண்டனி திரைப்படம் நடிகர் விஷால், sj சூரியா நடித்து தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து திரைப்படம் ஹிந்தி மொழியிலும் வெளியானது.மும்பையில் ஹிந்தி படத்திற்கான தணிக்கை குழு எல்லை மீறி செயல்படுவதாக நடிகர் விஷால் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.மார்க் ஆண்டனி திரைப்படம் ட்ரெய்லர் வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது அதிலும் குறிப்பாக "சிலுக்கா' என்ற வார்த்தை படத்திற்கான பிரமோஷன் ஆகவே அமைந்தது. தென்னிந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் பெற்று தந்தது.
மார்க் ஆண்டனி திரைப்படம் இந்தி மொழியில் வெளியிட முடிவு செய்த விஷால் இதற்காக மும்பை தணிக்கை குழுவை நாடினார். தணிக்கை குழு சான்று பெறுவதற்காக இரண்டு தவணையாக மொத்தம் 6.5 லட்சம் செலுத்தியுள்ளார். இதில் படம் திரையிடுவதற்கு 3 லட்சம் சான்றிதழ் பெறுவதற்கு 3.5 லட்சம் என கூறினார்.திரையில் ஊழலை காட்டுவது பரவாயில்லை ஆனால் நிஜ வாழ்க்கையிலும் அரசு அலுவலகத்தில் நடந்து வருகிறது அதை ஜீரணிக்க முடியவில்லை இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது இதை தடுக்க வேண்டும் என மகாராஷ்டிராவில் முதல்வர் மற்றும் பாரதப் பிரதமர் மோடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பாக உடனடி நடவடிக்கை வேண்டும் என நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டார்.தணிக்கை குழு விவகாரம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.