தமிழகமே நேற்று அதிமுக பொது குழுவில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் ஒன்றும் இல்லாமல் பொது குழு புஸ்வானமாக போனதுதான் மிச்சம் எனவும் பல நூறு கோடிகள் செலவு செய்தும் எடப்பாடி பழனிசாமி நினைத்த எந்த மாற்றத்தையும் அடையவில்லை என்ற கோவம் அவரது முகத்தில் வெளிப்பட்டது, இதில் மாலையை போட்டே ஆவேன் என விடா பிடியாக இருந்த அமைச்சர் பெஞ்சமின் நிலையை நினைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி மாலையை தவிர்த்து கிரிடம் மற்றும் வெள்ளி வாள் மற்றும் பெற்று கொண்டது ஏன் என்ற ரகசியம் கசிந்துள்ளது, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் நேற்று காலை 10.00 மணிக்கு நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை உற்சாகத்தைக் கொடுத்த போதும்,
தமக்கு மாலை அணிவிக்க வந்தவர்களை அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடித்துக் கொண்டார்.காவல்துறையினர் மற்றும் தனியார் காவலர்கள் புடைச்சூழ கூட்ட மேடைக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். ஒற்றைத் தலைமைக் கோரிக்கை வலுத்த சூழலில் அவைத் தலைவர் நியமனத்தை வழிமொழியும் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி பேசிய போது, முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பென்ஜமின் அவருக்கு பன்னீர் ரோஸ் மாலை அணிவிக்க முயன்றார்.
அப்போது, கடித்துக் கொண்ட அவர், மாலை அணிவிக்க வேண்டாம் என்றும், பூங்கொத்தை வழங்க வேண்டாம் என்றும் தவிர்த்தார்.அதன் பிறகும் கூட்டம்நிறைவடையும் தருவாயில், நிர்வாகிகள் மாலை அணிவிக்கும் போது, வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பின்னர், பொதுக்குழு சார்பில் கிரீடம் அணிவிக்கப்பட்டு வால் வழங்கியதை அவர் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகே, நிர்வாகிகளிடம் பூங்கொத்தைப் பெற்றார்.
நேற்று யாகம் செய்து வீட்டில் இருந்து கிளம்பிய எடப்பாடி பழனிசாமியிடம் அவரது ஆஸ்தான ஜோதிடர் சிவப்பு நிற மாலையை அணிய வேண்டாம் என கூறி இருக்கிறார், இதை எடப்பாடி அனைவரிடமும் சொல்லி இருக்கிறார், அதையும் மீறி வானகரம் மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடு செய்த பெஞ்சமின் எடப்பாடி பழனிசாமியிடம் நல்ல பெயர் வாங்க மாலை எடுத்து சென்று இருக்கிறார் ஆனால் கடைசியில் அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான் என்கின்றனர் அனைத்தையும் அறிந்தவர்கள்.