சட்டவிரோத பண பரிமாற்றத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார். ஜாமின் கோரியிருந்த மனுவின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு அளித்திருந்தார் அதனை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த மாதம் 9ம் தேதி புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது கால் மறுத்து போனதால் அவரை வீல்சேரின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அன்று மாலையே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையில் 10ம் தேதி செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து அவரின் உடல்நிலை மட்டும் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட்டது. இந்த மனு மீதான விசாரணையை விரைந்து விசாரிக்கவும் கோரிக்கையை வைத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை கால அவகாசம் கேட்டதால் விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது செந்தில்பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை அவருக்கு உடனடியாக ஜாமின் வழங்க வேண்டும் என்றும் மருத்துவ சிகிச்சை வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதை எதிர்த்து அமலாக்கத்துறை கடுமையாக வாதிட்டது, செந்தில் பாலாஜி நன்றாக தான் இருக்கிறார். உடல்நிலை கரணம் சொல்லி ஜாமீன் கேட்க செந்தில் பாலாஜி தரப்பு தந்திரம் செய்து வருகிறது.சிறையில் இருந்து வெளியே போனால் இந்த வழக்கின் மீது விசாரணையை சீர்குலைக்க செய்வார் என்று ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்தது அமலாக்கத்துறை. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து இன்று மீண்டும் இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் செந்தில் பாலாஜி ஜாமீன் மீதான வழக்கை விசாரித்து, உங்களின் சகோதரர் அசோக் குமார் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவ காரணத்திற்கு கூட ஜாமீன் தர முடியாது என தீர்ப்பளித்து, ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.