தமிழகத்தில் வரவிற்கும் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் பதவியும், அவருக்கான ஓட்டுகளும் குறையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அதேசமயம் பாஜகவின் ஓட்டு வங்கிகள் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் கூறுகின்றனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் அதிமுக தேசிய கூட்டணியில் விலகியது குறித்து உறுதிப்படுத்தியது. தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அதிமுக முக்கிய தலைவர்களும் எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று உறுதிப்படுத்தினார்கள்..
தமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தது பாஜக நிர்வாகிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தின் மூலம் மக்கள் பாஜகவிற்கு பெரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் திமுக சார்பில் நடந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்ற சோனியா காந்தியிடம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவி.கேஎஸ் இளங்கோவன் பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது என்று பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் பார்க்கின்றனர்.
இந்நிலையில் அரசியல் விமர்சகர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை அடித்து மேலே வந்து கொண்டு இருக்கிறர். வட இந்தியாவில் எடுத்த கருத்து கணிப்பு கூட தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருவதாக கூறுகிறது. C-Voter கருத்து கணிப்புகளும் இதை தான் சொல்கிறது. அதாவது தமிழ்நாட்டில் பாஜகவிற்கு மக்கள் பெரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனால் வரவிருக்கும் தேர்தலில் பாஜகவின் ஒட்டு அதிகரிக்கும் என்று தெரிகிறது. பாஜகவின் வளர்ச்சியால் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி பலமான அடி வாங்குவார் என்று அரசியல் விமர்சகர் கருத்து தெரிவிப்பது அதிமுக தரப்புகள் இடையே பிஜேபியுடன் கூட்டணியை வைத்திருக்கலாம் என்று புலம்பி வருகிறார்களாம்.
ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி லோக்சபா தேர்தலிலும், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறி வருகிறார். இதற்கிடையில் இவரின் இந்த முடிவை அரசியல் விமர்சகர்கள் கருத்து அதிமுகவின் கூடாரத்தை மொத்தமாக ஆட்டி போட்டுள்ளது. தற்போது அண்ணாமலை அதிமுகவை ஒரு கட்சி என்று பார்க்காமல் அதனை ஓரம் கட்டிவிட்டு, திமுக மட்டுமே அரசியலில் எதிரி என்று கடுமையாக விமர்சித்து வருகிறார். அதிமுகவும், அதிமுகவை தான் எதிர்க்கிறது. ஆனால் இப்போது அண்ணாமலை எதிர்க்கும் அளவிற்கு திமுகவை யாரும் விமர்சிக்கவில்லை.
அண்ணாமலைக்கு டெல்லி பக்கபலமாக இருந்து உதவி செய்து வருகிறது. அண்ணாமலையை பாஜக தலைமை ஓரம் கட்டி விட்டதாக தெரிவித்தது எல்லாம் சுத்த பொய் அதில் உண்மையில்லை. சி-வோட்டர் கருத்தின் படி கொங்கு மண்டலத்தில் ஜாதி வேறுபாடு காரணமாக வோட்டு நிச்சயம் எடப்பாடிக்கு சரியும் என்றும் அதிமுகவுக்கு நாயுடுகள், செங்குந்த முதலியர்கள் மற்றும் கவுண்டர்களின் ஓட்டு எடப்பாடிக்கு எதிர்க்க செல்லலாம் என்று தெரிகிறது.
சில தனிப்பட்ட கருத்து கணிப்பில் தென் மண்டலத்தில் 5 இடத்தில் எடப்பாடிக்கு டெபாசிட் காலியாகும், இசுலாமிய வாக்குகள், முக்குலத்தோர் வாக்குகள், பாஜகவிற்கு செல்லும் வாக்குகள், நாம் தமிழருக்கு செல்லும் வாக்குகள் சிதறுவதால் டெபாசிட் இழக்கும் நிலையில் எடப்பாடி தரப்பு உள்ளது. பழைய முறை அளவிற்கு அதிமுக தற்போது வெள்ளத்து என்றும் கூறப்படுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கொங்கு மண்டலத்தில் அனைத்து தரப்பு ஜாதி ஓட்டுகளும் திரும்பும் என்று கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் தோர்ததது. மேலும், எடப்பாடிக்கு கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு குறைந்து விட்டதாகவும் அரசியல் விமர்சகர் தெரிவிக்கின்றனர். இப்போது பாஜகவிற்கு எதிராக அதிமுக சென்று விட்டதால், பாஜக கொங்கு மண்டல் பகுதியில் வாக்குகளை குவிக்க கூடும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது. அண்ணாமலை பற்றிய வதந்திகளுக்கு வரக்கூடிய தேர்தலின் முடிவை முற்றுப்புள்ளி வைக்கும் அதன் பிறகு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.