அண்ணாமலை தொடங்கிய என் மண் என் மக்கள் யாத்திரை நாளுக்கு நாள் புது புது மாற்றங்களை உண்டாக்கி வருவதாக சமுக வலைத்தளங்களில் அரசியல் கட்சிகளை சாராத நபர்கள் கருத்து தெரிவித்து வந்த சூழலில் அதை திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஏற்க மறுத்து சமுக வலைத்தளங்களில் விமர்சனம் வைத்து வந்தனர்.தமிழக அரசியலில் மெல்ல மெல்ல பாஜக தனது தடத்தை பதிப்பதாக கூறிய நிலையில் அதனை ஆரம்பகட்டத்தில் பலரும் ஏற்க மறுத்த நிலையில் தற்போது இதுவரை எந்த அரசியல் இயக்கத்தையும் சாராத இளம் பெண் ஒருவர்,அண்ணாமலை மேற்கொண்ட யாத்திரையின் போது அண்ணாமலையை சந்தித்தார்.
தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டவர் இது வரை எந்த கட்சியில் சேருவது யாருக்கு வாக்கு அளிப்பது என்ற யோசனையில் இருந்த எங்களை போன்றொருக்கு உங்கள் பேச்சு தான் பாஜகவை தேடி வர காரணமாக அமைந்ததாக அண்ணாமலையிடம் தெரிவித்தார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கி இருக்கிறது, பெண்கள் வாக்கு என்பது அரசியலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் சூழலில் புது வாக்காளர்கள் அதிலும் பெண்கள் பாஜகவை நோக்கி வருவதும் அண்ணாமலையின் நடவடிக்கையின் மீது நம்பிக்கை வைத்து இருப்பதும் நாளுக்கு நாள் தமிழகத்தில் பாஜக வளர்வதை உறுதி செய்து இருக்கிறது.