24 special

வாட்ச் விவரம் கேட்டு சிறைவாசத்தை அனுபவிக்கும் செந்தில் பாலாஜி.... அடுத்து வீணாய் மாட்டிக் கொண்ட ஆர் எஸ் பாரதி...!!

RS BHARATHY,SENTHILBALAJI
RS BHARATHY,SENTHILBALAJI

2021 திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தையும் தன் கைக்குள் வைத்து திமுகவின் மூத்த அமைச்சர்களை விட அதிகாரத்தை தன்னிடம் வைத்து கெத்தாக சுத்தி வந்த செந்தில் பாலாஜி தற்போது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் செய்த ஊழலில் சிக்கி அமலாக்க துறை மற்றும் வருமான வரி துறையின் சோதனைகளால் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கைது குறித்து அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கையானது பெரும் அதிரடியாகவும் தக்க ஆதாரங்களுடன் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது ஏனென்றால் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது செந்தில் பாலாஜி தனது சகோதரனின் உதவியுடன் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி மக்களை ஏமாற்றியதன் பின்னணியை கண்டறிந்து செந்தில் பாலாஜியை அதிரடியாக கைது செய்தது.


இந்த கைதியிலிருந்து தப்பிக்க செந்தில் பாலாஜி மற்றும் அவரது தரப்பு பல முயற்சிகளை மேற்கொண்டும் தற்போது வரை ஜாமினில் கூட வெளியே வர முடியாமல் செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேலாக சிறை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். முன்னதாக செந்தில் பாலாஜி மீது அமலாக்க துறையும் வருமான வரித்துறையும் சோதனை மேற்கொள்வதற்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வீணாக வம்பிற்கு இழுத்து பெருமளவில் சமூக வலைதளம் முழுவதும் விமர்சிக்கப்பட்டார். அதாவது ஒரு முறை பத்திரிகையாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் வாட்ச் விவரத்தை கேட்க இந்த வாட்ச் அதிக பேரிடம் இல்லை இவரிடம் எப்படி வந்தது என அண்ணாமலையை குற்றம் சாட்டும்படியான கேள்விகளை முன் வைத்தார். ஆனால் செந்தில் பாலாஜி இந்த கேள்வியை முன்வைத்த அடுத்தே அண்ணாமலை ரப்பேல் வாட்ச் எப்படி வாங்கினார் அதற்காக யாரிடம் பணம் கொடுத்தார், யாரிடமிருந்து பெற்றார், தான் காட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் மொத்தமாக தயாரிக்கப்பட்டதில் எத்தனாவது வாட்ச்சை அண்ணாமலை வைத்துள்ளார் உள்ளிட்ட அனைத்தையும் விவரமாகவே வெளியிட்டார்.

இது செந்தில் பாலாஜிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது இந்த நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாஜக மாநில தலைவரான அண்ணாமலையை தொடர்பு படுத்தி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு அண்ணாமலை ஆர் எஸ் பாரதி தனக்கு எதிராக அவதூறு பரப்பி உள்ளதாக கூறி அவர் மீது ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை அவதூறு வழக்கை தொடர்ந்தார். அதாவது எந்த ஒரு ஆதாரமும் இன்றி தனக்கு எதிராக உண்மைக்கு புறமான அவதூறுகளை ஆர் எஸ் பாரதி தன் மீது சுமத்தியுள்ளார். இதனால் அவர் மான நஷ்ட ஈடாக ரூபாய் ஒரு கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசி அண்ணாமலை கள்ளக்குறிச்சி உயிரிழப்புக்கு என்னுடைய கூட்டு சதியை காரணம் என ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார் அவரது பேச்சு எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

அதனால்தான் வழக்கு தொடர்ந்தோம் இந்த விவகாரத்தில் ஆர் எஸ் பாரதியை நாங்கள் சிறைக்கு அனுப்புவோம் அரசியலுக்கு வந்து மூன்று ஆண்டுகளில் இதுவரை யார் மீதும் அவதூறு வழக்கு போடவில்லை ஆனால் ஆர் எஸ் பாரதியின் பேச்சு எல்லை தாண்டி விட்டது. அவர் என்னை சின்ன பையன் என்று கூறி இருக்கிறார், இந்த சின்ன பையன் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் பொறுத்திருந்து பார்க்க போகிறார் என்று ஆர் எஸ் பாரதியின் பேச்சுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் வட்டாரங்களில், அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவரம் கேட்ட விவகாரத்திற்கு பிறகு செந்தில் பாலாஜி தற்போது சிறையில் தவித்து வருகிறார், இந்த நிலையில் ஆர் எஸ் பாரதி ஏன் வீணாக போய் மாட்டிக் கொண்டுள்ளார் யார் மீதும் போடாத அவதூறு வழக்கை தற்போது ஆர் எஸ் பாரதி மீது அண்ணாமலை போட்டு இருக்கிறார். இதற்கு பின்னால் நிச்சயமாக ஆர் எஸ் பாரதி சிறைக்குச் செல்வார் செந்தில் பாலாஜிக்கு நடந்த நிலைமைதான் இவருக்கு ஏற்பட போகிறது என கிசு கிசுக்கப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தை அண்ணாமலை விடப்போவதில்லை எனவும் நிச்சயம் ஆர்.எஸ்.பாரதி சிறை செல்வார் எனவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது...