சினிமாவில் ஹீரோவாக நடித்து அதன் பிறகு அரசியலில் நுழைந்து தற்பொழுது வரை அரசியலில் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்து வரும் தலைவர் என்றால் அது எம்ஜிஆர் தான்!! சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டு இருந்த ஒரு நடிகர் திடீரென்று எப்படி முதலமைச்சர் ஆனார் என்று பார்த்தால் பல செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. முதலில் திமுகவில் இருந்து வந்த நிலையில் திமுக தலைமையிடம் சொத்துக்கணக்கு காட்ட சொன்னதாலும், கட்சியின் செலவு குறித்து கேட்டதாலும் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு அதன் பிறகு தனது ரசிகர்கள் ஆதரவுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை தொடங்கினர்..தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து திடீரென்று உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட எம்ஜிஆரை சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அழைத்து சென்று சிகிச்சை பலனின்றி அவர் டிசம்பர் 24, 1987 ஆம் ஆண்டில் இறந்து விட்டார். என்னதான் இருந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்றும் பலருக்கு அவர் கடவுளாகவே இருந்து வருகிறார். மேலும் இவருக்காக இன்றளவிலும் கூட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்கும் தொண்டர்கள் பலரும் இருந்து வருகின்றனர். மூன்று முறை அரசியலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி வகித்து அரசியலில் உச்சகட்ட செல்வாக்கை அடைந்து இன்று வரையிலும் மக்கள் மத்தியில் மரியாதை அதிகமாக இருக்கும் அரசியல் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அடைந்த அரசியல் முன்னேற்றம் தாமும் அடைய வேண்டும் என்று பல போட்டிகள் நிகழ்ந்து வந்தது. அதில் சினிமாவில் மிகவும் முக்கியமான பிரபலம் ஒருவர் எம்ஜிஆரின் இடத்தை பிடித்து விட வேண்டும் என்று நினைத்து செயல்பட்டதாக நடிகர் ஜி எம் குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் செய்தி வெளியாகி உள்ளது. அந்த பிரபலம் யார்?? இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் எம்ஜிஆர் இறந்த பொழுது அவருடைய இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து 40 வருடம் கடின உழைப்பினால் எம்ஜிஆர் இந்த இடத்தை பிடித்துள்ளதாகவும், ஆனால் இவ்வளவு விரைவில் நீங்கள் ஆசைப்படுவது சரியில்லை என்று கூறியதாக பேட்டையில் கூறியுள்ளார். ஆனால் உடல் இருந்தவர்கள் பாக்கியராஜ் அதனால் முதலமைச்சராக ஆகிவிடலாம் என்று ஏத்தி விட்டதாகவும், இதனைப் பார்த்து இயக்குனருக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பி ஷாக் ஆகி பார்த்ததாக கூறியுள்ளார்.
மேலும் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்த சமயம், பாக்யராஜ் இந்த அமைச்சரவையை நான் எடுத்துக்கொள்கிறேன் என சீரியஸாகவே பேசியதாகவும் வேறு ஜி.எம்.குமார் கூறினார்... மேலும், உடன் இருந்தவர்களின் பேச்சைக் கேட்டு ஆசைப்பட்டு நிறைய பணங்களை பாக்கியராஜ் இழந்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் பாக்கியராஜ் மற்றும் அவரிடம் இருந்து அனைவருமே என்னென்ன பதவி என்று அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டதாகவும் GM குமார் பெட்டியில் கூறியுள்ளார். இதுமட்டுமில்லாமல் பாக்யராஜுக்கு அரசியல் முகமே கிடையாது அவருக்கு அரசியல் ஒத்துவராது ஆனால் அவர் அரசியல் ஆசைப்பட்டார் எனக்கூறியது வேறு இணையத்தில் வைரலாகிறது... ஜி.எம்.குமார் அளித்த பேட்டி குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.