24 special

உஷார் ஆன செந்தில் பாலாஜி ...!திமுக என்ன செய்யபோகிறது

Mk Stalin,dmk, senthil balaji
Mk Stalin,dmk, senthil balaji

தொடர் எதிர்ப்புகள் கிளம்பி வருவதால் அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் விவகாரத்தில் எச்சரிக்கையை கடைபிடிக்க துவக்கி விட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நேரடியாகவே பத்திரிகையாளர்கள், 'டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக வைத்து விற்கப்படுகிறது.


இவை எல்லாவற்றிற்கும் காரணம் கரூர் கம்பெனியின் வசூல் அட்டகாசம் தாங்காமல்தான் நாங்கள் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து விக்கிறோம் என ஊழியர்களே கூறுகிறார்கள் இது குறித்து என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள்' என அமைச்சர் செந்தில் பாலாஜி முகத்துக்கு நேராவே கேட்டுவிட்டனர். உடனே அமைச்சர் செந்தில்பாலாஜி, 'எந்த கடை என்னிடம் வந்து காட்டுங்கள்! 5000 கிடைக்கும் நீங்கள் சென்று விட்டீர்களா?' என்றெல்லாம் கூறி பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது அமைச்சர் செந்தில் பாலாஜி கூற வேண்டிய பதிலை விடுத்து நடவடிக்கை எடுக்கிறேன் என அமைச்சராக கூறாமல் கரூர் கம்பெனி பற்றி பேச்சு எடுத்ததும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கோபப்பட்டு கொதித்தது கிட்டத்தட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. ஏற்கனவே திமுக அமைச்சரவையில் இருக்கும் பிரச்சினைகள் பத்தாது என்று இவர் வேற பிரச்சனை என தலைமையே நினைத்துக் கொள்ளும் அளவிற்கு இருந்தது செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகள். இப்படி செந்தில் பாலாஜி இணையத்தில் கோபமாக பேசியது இணையத்தில் பரவிய காரணத்தினால் மது பிரியர்கள் தங்கள் வேலைகளை காட்ட ஆரம்பித்தார்கள்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்குகள் பலவற்றிலிருந்து பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதல் பணம் வாங்குவதை வீடியோவாக எடுத்து 'பத்து ரூபா பாலாஜி' என்ற பெயரில் சமூக வலைதளத்தில் ஹேஷ் டேக் ட்ரெண்டிங் செய்ய ஆரம்பித்தார்கள். அதனை வீடியோவாக வேறு பதிவிட்டார்கள் இவை அனைத்தும் இணையத்தில் படு வைரலாக கடந்த சில நாட்களாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஆடியோ வெளியான காரணத்தினால் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பதவி அமைச்சரவை மாற்றத்தில் பறிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்பொழுது செந்தில் பாலாஜி நடவடிக்கைகள் காரணமாக திமுகவிற்கு தலைவலி ஏற்படுகிறது என திமுக தலைமை உணர்ந்து செந்தில் பாலாஜியின் பதவியையும் மாற்றலாமா என யோசித்து வருகிறது என்ற தகவல்கள் வெளியானது.

இதற்கெல்லாம் காரணம் டாஸ்மாக்கில் பத்து ரூபாய் வாங்குவதோ அல்லது கரூர் கம்பெனி அட்டகாசமோ கிடையாது கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம், மரக்காணத்தில் நடந்த கள்ளச்சாராய சாவுகள் இப்படி மதுவிலக்கு ஆயத்துறை தீர்வு அமைச்சராக இருந்து கொண்டு தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகள் அதுவும் டாஸ்மாக் பாட்டிலில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்த மது பிரியர்கள் உயிரிழந்த காரணத்தினால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என திமுக தலைமை உணர்ந்தது.

இது மட்டுமல்லாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வேறு இந்த பிரச்சினையை கையில் எடுத்து தமிழக தலைமைச் செயலாளரிடம் இந்த பிரச்சினை குறித்து விரிவான அறிக்கை கேட்டு இருந்தார். போதாக்குறைக்கு எதிர்க்கட்சிகளான பாஜகவும், அதிமுகவும் இந்த பிரச்சினையை கையில் எடுத்து ஆளுநர் வரை கொண்டு சென்றது.

இப்படி டாஸ்மாக் மற்றும் கள்ளச்சாராய விவகாரம் திமுக அரசுக்கு மேலும் ஒரு தலைவலியை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த திமுக தலைமை முதல்வர் ஸ்டாலினின் சிங்கப்பூர் பயணத்திற்குப் பிறகு அடுத்த அமைச்சரவை மாற்றத்தை வைத்துக் கொள்ளலாமா என்கின்ற ரீதியில் கூட பேச்சு வார்த்தையில் இறங்கியது என தகவல்கள் தெரிவித்தன. இவை எல்லாவற்றையும் கணக்கு போட்ட செந்தில் பாலாஜி நமக்கு இது பின்னடைவு என தெரிந்து தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

 செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர் (கலால்) மற்றும் உதவி ஆணையர்களுடனான (கலால்) ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:

தொழிற்சாலைகளால் கொள்முதல் செய்யப்படும் மெத்தனால், இயல்பு மாற்றப்பட்ட சாராவி மற்றும் தெளிந்த சாராவி ஆகியன உரிய வழிமுறையாக பெறப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் ஆகியவற்றின் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுபானக் கடைகள், மதுபான கூடங்கள் டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டவை, மனமகிழ் மன்றங்கள் மற்றும் ஹோட்டல்களுடன் இணைக்கப்பட்ட மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள்ளும் மூடப்படுக்கிறதா என்பதை களஆய்வு மேற்கொள்ள வேண்டும். மதுவில்லா நாட்கள் மற்றும் அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ள நாட்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதா என்பதை களஆய்வு மேற்கொண்டு உறுதிசெய்ய வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தார்.

இப்படி அரசியல் ரீதியாக தான் கட்டம் கட்டப்படுவதை உணர்ந்து உடனடியாக நடவடிக்கையில் செந்தில் பாலாஜி இறங்கியது அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூரிலிருந்து திரும்பியவுடன் என்ன நடக்குமோ என அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது