Cinema

பேரரசு சொன்ன ஒற்றை வார்த்தையால் கதி கலங்கி உள்ள சினிமா மற்றும் அரசியல் களம்

Perarasu,pa ranjith,mk stalin
Perarasu,pa ranjith,mk stalin

இயக்குனர் பேரரசு நேர்காணல் ஒன்றில் தெரிவித்த தகவல் திரை துறையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும் சற்று அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.


நேர்காணல் ஒன்றில்  பா.ரஞ்சித் மலக்குழி மரணம் குறித்து கடவுள் பெயரை பயன்படுத்தியது குறித்து ஏன் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறீர்கள் என கேள்வி கேட்க அதற்கு பேரரசு கொடுத்த பதில் தற்போது அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

ஏன் சார் நான் கேட்கிறேன் நீ தான் ராமர் கடவுள் இல்லை என சொல்கிறாய் அப்புறம் எதுக்கு ராமர் அனுமான் பெயரை பயன்படுத்துகிறாய், உனக்கு வேண்டும் என்றால் ராமர் கடவுள் இல்லை என்பாய், விமர்சனம் செய்ய என் கடவுளை இழுப்ப இது என்ன அயோக்கிய தனம்.

நாகரிகம் வளர்ச்சி அடைந்த நிலையிலும் மனிதன் அள்ளுகிறான் என்றால் சுகாதார துறை அமைச்சர் பெயரை போட்டு கவிதை எழுது, ஏன் ஆட்சியில் உள்ள முதல்வர் பெயரை பயன்படுத்து அதெல்லாம் உன்னால் முடியாது  எங்கள் கடவுளை இழுக்க உனக்கு என்ன அருகதை இருக்கு என கடுமையாக கொந்தளித்து இருக்கிறார் பேரரசு.

இது மட்டும் இல்லாமல் கலைஞர் பேனா சிலை தொடங்கி, திமுக இரண்டு ஆட்சி  குறித்தும் பேரரசு கொடுத்த TNNEWS24 DIGITAL பக்கத்தில் வெளியாகி தற்போது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.