உதயநிதி ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா மகன் ஜெய்ஷாவை சந்தித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அங்கு நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ப்ளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டம் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது இந்த போட்டியை பார்க்க பல பிரபலங்கள் தொடங்கி அரசியல் பிரமுகர்களும் வந்து இருந்தனர்.
அதேநேரம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோதே மைதானத்தின் கேலரியில் முக்கியமான சந்திப்பும் நடந்தது சென்னை அணிக்கும் குஜராத் அணிக்குமான ஆட்டத்தை பார்க்க இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா வந்திருந்தார். தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி நண்பர்களுடன் இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் ரசித்தார்.வ
விளையாட்டு நடந்துகொண்டிருந்தபோதே ஜெய் ஷாவை சென்று சந்தித்திருக்கிறார் உதயநிதி. இருவரும் கைலுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜெய் ஷா அமைச்சர் உதயநிதியிடம், ‘தமிழ்நாடு சட்டமன்றத்தில் உங்களிடம் ஐபிஎல் டிக்கெட் கேட்கப்பட்டபோது… என் பெயரைச் சொல்லி என்னிடம் கேட்கச் சொன்னீர்களாமே?’ என்று கேட்டு சைலண்டாக பார்த்து சிரித்துள்ளார் ஜெய் ஷா. இதை எதிர்பாராத உதயநிதி பதிலுக்கு பலத்த சிரிப்பு சிரித்து சமாளித்துள்ளார்.
கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் சுக்கான டிக்கெட்டுகளை எம்.எல்.ஏ.க்களுக்கு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘உங்க நண்பர் அமித் ஷா இருக்காருல்ல அவர் மகன் ஜெய் ஷா தான் இந்தியாவுக்கே கிரிக்கெட் வாரிய செயலாளர். அவர்கிட்ட கேட்டா கிடைக்கும். அவர் உங்களுக்கு ரொம்ப வேண்டியவர்” என்று பதிலளித்திருந்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த இந்த சுவாரஸ்யம் தேசிய ஊடகங்கள் வரை பேசப்பட்டது.
தற்போது ஜெய்ஷா உதயநிதியிடம் எழுப்பிய கேள்வி மூலம் நாம் என்ன பேசுகிறோம் யார் குறித்து பேசுகிறோம் என்ற தகவல் அனைத்தையும் சேகரித்து வைத்து இருக்கிறார்கள் என கண் கூடாக உதயநிதி தெரிந்து கொண்ட சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது.
இதே போல் உதயநிதி பிரதமர் மோடி தொடங்கி உள்துறை அமைச்சர் வரை பல்வேறு விதங்களில் விமர்சனம் வைத்து இருக்கிறார் அதற்கெல்லாம் வரும் நாட்களில் பதிலடி கிடைக்குமா என்ற கேள்விதான் இப்போது இரண்டு கட்சியினர் மத்தியிலும் எழுந்து இருக்கிறது.