வேற வழியில்லை கட்சியை காப்பாத்தவேண்டும் என செந்தில் பாலாஜி விவகாரத்தில் அறிவாலயம் முடிவெடுத்து அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகள் செந்தில்பாலாஜிக்கு தலையில் இடியை இறக்கியுள்ளது.கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடிகள் ஈடுபட்ட வழக்கு பற்றி விசாரிக்க அமலாக்க துறைக்கு தடை விதித்திருந்த சென்னை உயர்நீதிமன்றம் தற்போது விசாரணை தடையை நீக்கி உள்ளது.
இதனால் யாரும் எதிர் பாக்காத வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி காலையில் நடை பயிற்சிக்காக சென்ற நேரத்தில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது அரசு பங்களாவில் தங்களது சோதனைகளை மேற்கொண்டனர் அமலாக்க துறையினர். ரெய்டு பற்றிய செய்தி அறிந்தவுடன் வீடு திரும்பியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் அதிரடி படையினரின் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்!
அதனை தொடர்ந்து செந்தில்பாலாஜி வீட்டில் கிடைத்த தகவலை வைத்து தமிழக தலைமைச் செயலகத்தில் நுழைந்த அமலாக்க துறையினர் நேரடியாக அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலக அறைக்கு சென்று அங்கும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதெல்லாம் நேற்று ஒரு நாளில் நடந்தவை, மேலும் 15 மணி நேரம் ஒருபுறம் ரெய்டு மறுபுறம் செந்தில்பாலாஜியிடம் துருவித்துருவி விசாரணை என செந்தில்பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த காரணத்தினால் அடுத்து செந்தில்பாலாஜியை டெல்லிக்கு அழைத்து சென்று விசாரிக்க முடிவெடுத்தனர் அமலாக்கத்துறையினர்.
இதன் தொடர்ச்சியாக விடியற்காலை 3 மணிக்கு செந்திபாலாஜியை கைது செய்ய முற்படும்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழுது கதறி செந்தில்பாலாஜி அடம் பிடித்ததும், பின்னர் பிடிக்கவந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை எட்டி உதைத்ததும் நடந்தது.இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தனக்கு நெஞ்சுவலி அதனாலதான் என்னால் முடியவில்லை என செந்தில்பாலாஜி கூறியதால் உடனே ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடனே ஓமந்தூரார் மருத்துவமனைக்கு திமுக அமைச்சர்கள் அனைவரும் விடியற்காலையில் விரைந்தனர். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் காலையிலேயே செந்தில்பாலாஜியை சென்று பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வந்தார்.
பின்னர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர்கள் அனைவரும் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து திமுக மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளாராம். அதில் செந்தில்பாலாஜியை பார்த்தால் நம் கட்சிக்கு கெட்டபெயர் ஏற்பட்டுவிடும் எனவே செந்தில்பாலாஜியிடம் இருந்து துறைகளை பிடுங்காலம் என முதல்வரிடம் மூத்த திமுக தலைவர்கள் கூறினார்களாம்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்ட முதல்வர் தற்பொழுது அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி தூக்க வேண்டாம் ஆனால் துறைகளை உடனடியாக மாற்றி தருகிறேன் என உறுதி அளித்துள்ளாராம். மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இது குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அவர் கூறியதாவது, செந்தில் பாலாஜி வசம் இருக்கும் இரண்டு துறைகள் பறிக்கப்பட போகின்றன. ஒன்று மின்சாரத்துறை! மின்சாரத்துறை தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசிற்கு செல்லவிருக்கிறது, மூத்த தலைவரான ஐ பெரியசாமிக்கு டாஸ்மாக் செல்லவிருக்கிறது. தற்பொழுது துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் எனவும்! வரும் காலங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என்றும் தெரிகிறது இந்த தகவலை பகிர்ந்து உள்ளார்.
செந்தில் பாலாஜி தற்பொழுது மாட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவரை காப்பாற்ற முயற்சித்தால் அது கட்சிக்கே பெரிய ஆபத்தாக முடிக்கும் என திமுக தலைமை உணர்ந்து தற்பொழுது அவரை அமைச்சரவிலிருந்து கழட்டிவிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது இந்த தகவல் மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜி தரப்பிற்கு கிடைத்தவுடன் மேலும் அதிர்ச்சியால் உறைந்துள்ளனர். காரணம் அமைச்சர் பதவியில் இருக்கும் வரை தான் நமக்கு மதிப்பு அமைச்சர் பதவியில் இருந்து நம்மளை தூக்கிவிட்டால் மதிப்பு கிடையாது என உணர்ந்த செந்தில் பாலாஜி தரப்பு தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.