24 special

கைது செய்வதற்கு முன்னே செந்தில் பாலாஜிக்கு கிடைத்த தகவல்...!இதனால் தான் நெஞ்சு வலி நாடகமா..?

Senthil balaji
Senthil balaji

அமலாக்கத்துறை ரெய்டு நடத்தும் சமயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செந்தில்பாலாஜியை பார்க்க விரைந்ததும், விடியற்காலையில் செந்தில்பாலாஜி கதறியதற்கும் உள்ள பின்னணி தற்போது வெளிவந்துள்ளது.


கடந்த மாதத்தில் செந்தில் பாலாஜி மீது தொடர்ந்து எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் சோதனை நடந்து முடிந்தது. சோதனை முடிந்து விட்டது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு நிம்மதியாகும் சமயத்தில் அமலாக்க துறையினர் அதிரடி ரெய்டில் இறங்கியுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது செய்த பண மோசடி வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அமலாக்கத்துறை இதில் விசாரணை மேற்கொள்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம்  தடை விதித்திருந்தது தற்போது அந்த தடையை ரத்து செய்துள்ளது உயர்  நீதிமன்றம், அதனைத் தொடர்ந்து நேற்று காலை எட்டு மணி அளவில் சென்னை, கரூர் உள்ளிட்ட செந்தில் பாலாஜி தொடர்புடைய மற்றும் செந்தில் பாலாஜியின் சொந்த வீட்டிலும் அமலாக்க துறையினர் தங்களது சோதனைகளை மேற்கொண்டனர். 

சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு பங்களாவில் அதிரடி படையினரின் பாதுகாப்பில் அமலாக்கத் துறை தங்களது சோதனைகளை முதலில் தொடங்கியது. ஆனால் வீட்டில் ரெய்டு துவங்கும் பொழுது செந்தில் பாலாஜி வீட்டிலே இல்லை, அவர் காலையில் வழக்கம் போல் வாக்கிங் சென்ற அந்த சமயத்தில் அமலாக்க துறையினர் ரெயிடை துவங்கினார்கள்.  இதற்கு அடுத்ததாக கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினார். 

அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபடும் பொழுதும் செந்தில் பாலாஜியின் வீடு அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அதாவது முதல்வர் தலைமை வகிக்கும் தலைமைச் செயலகத்திலேயே அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலக அறையில் மற்ற ஊழியர்கள் மற்றும் சில அமைச்சர்கள் இருக்கும்பொழுது நேரடியாக உள்ளே சென்று சோதனையை மேற்கொண்டுள்ளனர். ஒரு அமைச்சர் தலைமை செயலக அறையில் அமலாக்கத்துறை இறங்குவது வரலாற்றில் இதுவே முதல் முறை!

இப்படிப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த நேரமும் கைது செய்யப்பட உள்ளார் என்ற தகவலும் வெளியானது, இந்த கசிந்த செய்தியால் திமுகவின் மூத்த அமைப்பு செயலாளராக உள்ள ஆர் எஸ் பாரதி பரந்தாமன் உள்ளிட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு அவசரமாக ஓடியுள்ளனர். அங்கு அவர்களை அதிரடி படையினர் உள்ளே அனுமதிக்காத காரணத்தினால் வெளியிலேயே கூட்டமாக கூடி காத்திருந்ததாக கூறப்படுகிறது. இப்படி ஆர்.எஸ்.பாரதி உடனே செந்தில்பாலாஜி வீட்டிற்கு ஓடியதற்கு பின்னணியில் எந்த நேரம் கைதுசெய்யப்பட்டாலும் நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும் நீங்கள்தான் முக்கிய அமைச்சர் உங்களிடம்தான் முக்கிய தகவல்கள் உள்ளது என கூறுவதற்காகவே ஆர்.எஸ். பாரதி சென்றதாகவும் இதன் காரணமாகவே அமலாக்கத்துறை ஆர்.எஸ்.பாரதியை உள்ளே விடவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நிச்சயம் கைது செய்யப்பட்டு டெல்லி விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டால் அது தனக்கு வாழ்நாள் சிக்கல் என செந்தில்பாலாஜி உணர்ந்ததாலேயே நெஞ்சுவலி நாடகம் நடத்துகிறார் எனவும் சில தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நிலையால் முதல்வர் குடும்பம் அதிர்ச்சியிலும் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்திலும் இருந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.