24 special

ஆளும் கட்சிக்கு அடுத்தடுத்து வரும் பிரச்சனைகள்...!திணறிப்போய் இருக்கும் திமுக

Amuthaa,mk stalin
Amuthaa,mk stalin

ஒரு பக்கம் அமலாக்க துறையின் ரெய்டு என்று தமிழக அரசு தவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மறுபக்கம் அமித் ஷாவிடமிருந்து பறந்து வந்த கடிதம் திமுக அரசை நிலைகுலைய வைத்துள்ளது.


செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலக அறைகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு சமயம் சிக்கிய ஆவணங்களால் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது, கைது செய்தால் அமைச்சர் பதவிக்கு ஆபத்து, அரசியல் வாழ்க்கைக்கு ஆபத்து என செந்தில்பாலாஜி உணர்ந்த காரணத்தினால் கைதின்போது அழுது அடம்பிடித்தார், பிடிக்க வந்த அதிகாரிகளை எட்டி உதைத்தார். இருந்தாலும் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் தற்போது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் அடுத்தபடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எப்படியாவது செந்தில்பாலாஜியை டெல்லி கொண்டு செல்லாமலே தடுக்கவேண்டும் என தனது நிகழ்ச்சிகளை ரத்துசெய்து முதல்வர் ஸ்டாலின் திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் போட்டுள்ளார். இந்த நிலையில் அமித்ஷா அலுவலகத்தில் இருந்து வந்த கடித்ததால் ஒட்டுமொத்த திமுகவும் ஆடிபோயுள்ளது.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு மத்தியில் ஆளும் பாஜக தனது ஒன்பதாண்டு கால ஆட்சியை நிறைவடைந்து பத்தாவது ஆண்டு அடி எடுத்து வைப்பதை கொண்டாடும் விதமாக நடைபெற்ற வேலூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்தார். நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் இரவில் விமானத்தின் மூலம் சென்னை வந்தடைந்த அமித் ஷாவை பாஜக தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து தன்னை வரவேற்ற பாஜகவினரை பார்த்து மகிழ்ச்சியுடன் கையடிசைத்த படி அமைச்சர் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென மின்தடை ஏற்பட்டு அந்த இடமே இருள் சூழ்ந்தது. மிகவும் அபாயகர சூழ்நிலை உள்ள அமைச்சருக்கு உயர்தர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இப்படி திடீரென மின்தடை ஏற்பட்டது பாஜகவினர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. 

இதனை பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் கடுமையாக கண்டித்து தமிழக அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வந்தார். அதற்குப் பிறகு மின்சார அதிகாரிகள் பாஜகவினரிடம் தொடர்பு கொண்டு ஏற்கனவே மின்தடை பிரச்சனைகள் இருந்து வருகிறது அதனால் தற்போது நடைபெற்ற சம்பவமும் திடீரென நிகழ்ந்தது யாரும் திட்டமிட்டு செயல்படுத்தியது அல்ல என வாய்மொழி அறிவிப்பு கொடுத்தனர். மேலும் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வு ஏதோச்சையாக நடந்ததாக தான் இருக்க வேண்டும் ஏனென்றால் தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் ஒரு மிகப்பெரிய தலைவர் வரும்பொழுது இத்தகைய நிகழ்வுகள் நடப்பது எதார்த்தமானதாக தான் இருக்கும் யாரும் திட்டமிட்டு செயல்பட மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 

ஆனால் அது தீவிர பாதுகாப்பில் இருக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையின் பொழுது ஏற்பட்ட மின்தடை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமித் ஷா அலுவலகத்தில் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் பறந்துள்ளது. உள்துறை அமைச்சரின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது, இதற்கான காரணத்தை விளக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு உள்துறை அமைச்சகம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே ரெய்டு விவகாரத்தில் ஆடிப்போய் இருக்கும் திமுக அமைச்சரவைக்கு இந்த கடிதம் உச்சியில் அடித்ததுபோல் உள்ளது. இந்த கடிதத்திற்கு உடனே விளக்கம் அளிக்காவிட்டால் அமித்ஷா அலுவலகம் நேரடியாக இறங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருபுறம் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் செந்தில்பாலாஜி மறுபுறம் அமித்ஷா அலுவலக கடிதம் என தொடரும் மின்னல் வேக அஸ்திரங்களலால் திமுக அமைச்சரவை திணறிப்போய் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.