ஆந்திராவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமராம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட திரைப்படம் "RRR" பிரமாண்ட இயக்குனர் ராஜமவுளி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம் வசூல் மழையை குவித்து வருகிறது, மேலும் சுதந்திர போராட்டத்தை மையமாக கொண்டும் தயாரிக்கப்பட்ட திரைப்படம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது, இப்படி ஒரு பக்கம் இருக்க தமிழகத்தை சேர்ந்த சிலர் இந்த திரைப்படத்தை பார்த்து கதறி வருகின்றனர், அதில் ஒருவர்தான் பத்திரிகையாளர் கம் யூடுப்பர் செந்தில்.
இவர் RRR படத்தில் ராம் சரண் பெயர் ராம் என்றும் ஜூனியர் NTR பெயர் பீம் அதாவது ராமர், பீம் போன்று காதாபாத்திரங்களை பெயராக வைத்துள்ளனர் எனவும் கதையின் நாயகன் ராம் சரண் பூணூல் போட்டு வருகிறார் என கதறு கதறு என கதறி இருக்கிறார் செந்தில், இந்த வீடியோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
RRR படத்தின் கதையில் எப்படி ராம் என பெயர் வைக்கலாம் என செந்தில் கதறுகிறார், அவரின் இயற் பெயரே ராம் சரண் என்பது செந்திலுக்கு தெரியாதா? ஒரு திரைப்படம் மொத்த திராவிட கும்பலையும் கதற விட்டு இருக்கிறது எனவும் நெட்டின்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரை படத்தை திரைப்படமாக மட்டும் பார்க்கவேண்டும் என ஜெய் பீம் திரைப்படத்தின் போது பாடம் எடுத்த செந்தில் ஏன் RRR படத்தை பார்த்து கதறவேண்டும் என நெட்டிசன்கள் செந்திலுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மொத்தத்தில் ஒரு RRR திரைப்படம் செந்தில் போன்றவர்களின் தூக்கத்தை மட்டுமல்ல மொத்த திராவிட திரைப்பட பத்திரிகையாளர்கள் தூக்கத்தையும் கெடுத்துள்ளது என்பதே செந்திலின் கதறலில் இருந்து தெரியவந்துள்ளது. செந்தில் கதறல் வீடியோ கிழே இணைக்கப்பட்டுள்ளது.